SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காரைக்கால் தனியார் துறைமுகத்தில் இருந்து நிலக்கரி ஏற்றி வந்த ரயில் இன்ஜின் பழுது

8/12/2022 1:22:37 AM

நாகப்பட்டினம், ஆக.12: காரைக்கால் தனியார் துறைமுகத்தில் இருந்து நிலக்கரி ஏற்றி வந்த ரயில்இன்ஜின் பழுதடைந்ததால் நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை செல்லும் சாலையில் உள்ள தண்டவாளத்தில் ரயில் நின்றது. இதனால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காரைக்கால் தனியார் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி தினந்தோறும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதேபோல் நேற்று காரைக்காலில் உள்ள தனியார் துறைமுகத்திலிருந்து 5 ஆயிரம் டன் நிலக்கரியை ஏற்றிக்கொண்டு சரக்கு ரயில் நாகப்பட்டினம் வழியாக மேட்டூருக்கு சென்றது. நாகப்பட்டினம் ரயில்வே ஸ்டேசன் அருகே வந்தபோது, திடீரென ரயில் இன்ஜின் பழுதடைந்து நின்றது. இதை சற்றும் எதிர்பாராத ரயில்வே ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் முயற்சி பலன் அளிக்காமல் நாகப்பட்டினம் -அக்கரைப்பேட்டை ரயில்வே கேட் குறுக்கே ரயில் நின்றது. இதனால் அக்கரைப்பேட்டை செல்லும் சாலையில் மூடப்பட்ட ரயில்வே கேட் திறக்கப்படாமல் மூடியே வைக்கப்பட்டது. தண்டவளாத்தில் நிலக்கரியுடன் ரயில் நின்றதால் அக்கரைப்பேட்டை கிராமத்திற்கும், அக்கரைப்பேட்டையில் உள்ள மீன்பிடித்துறைமுகம், வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளுக்கு எந்த வாகனமும் செல்ல முடியாமல் நின்றது.

இதனால் நாகப்பட்டினம் முதலாவது கடற்கரை சாலை, அக்கரைப்பேட்டை சாலையில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் நின்றது. இதனால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பிவிடும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் 3 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்த ரயில்வே ஊழியர்கள் நாகப்பட்டினனத்தில் நின்ற மற்றொரு பயணிகள் ரயில் இன்ஜின் மூலம், நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரயில் இன்ஜினுடன் பொருத்தி இயக்கி நாகப்பட்டினம் ரயில்வே ஸ்டேசன் கொண்டுச் சென்று நிறுத்தினர். இதன்பின்னர் அக்கரைப்பேட்டை செல்லும் சாலையில் உள்ள ரயில்வே கேட் திறக்கப்பட்டது. போக்குவரத்து சீர்செய்யப்பட்டது. இச்சம்பவத்தால் எர்ணாகுளத்திலிருந்து காரைக்காலுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில்கள், நாகூர், கீழ்வேளூர் ரயில்வே ஸ்டேசன்களில் நிறுத்தப்பட்டது. இதனால் பல மணி நேரம் பயணிகள் காத்திருந்து காலதாமதமாக சென்றனர். சரக்கு ரயிலில் எப்போதும் இரண்டு இன்ஜின்கள் பொருத்தப்பட்டு சரக்கு இயக்கப்படும். இதனால் எந்தவித பிரச்னையும் இன்றி சரக்கு ரயில் சென்று வந்தநிலையில் நேற்று ஒரே ஒரு இன்ஜின் மட்டும் இணைத்து இயக்கியதால் லோடு தாங்க முடியாமல் இன்ஜின் பழுதடைந்து நின்றதாக ரயில்வே வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pakistan-hospital

    பாகிஸ்தானில் தேங்கி நிற்கும் வெள்ள நீரால் வேகமாக பரவும் மலேரியா: மருத்துவமனைகள் நோக்கி மக்கள் படையெடுப்பு..!!

  • temple-dubai-6

    துபாயில் பிரம்மாண்ட இந்து கோயில்!: சிவன், விஷ்ணு சன்னதியுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு திறப்பு.. கண்கவர் புகைப்படங்கள்..!!

  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்