SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆன்லைனில் பணம் இழப்பை தடுக்க விழிப்புணர்வு வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

8/10/2022 5:04:48 AM

தொண்டி, ஆக.10: தொண்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இளைஞர்கள் அதிகமாக ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக தெரிகிறது. இது மிகப் பெரிய இழப்புகளை ஏற்படுத்தும் என்பதால் இதன் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகரீக வளர்ச்சியின் பயனாக உலகை உள்ளங்கையில் அடக்கும் அளவிற்கு விஞ்ஞான வளர்ச்சி அடைந்துள்ளது. அதன் பயனாக அனைவர் கரங்களிலும் செல்போன் உள்ளது. இதில் கிடைக்காத தகவல்களே இல்லை என்றும் சொல்லலாம். கல்வி கற்பதற்கு இன்று இதுவும் ஒரு புத்தகமாக உள்ளது.

அதனால் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். மாணவர்கள் தவிர்த்து இளைஞர்கள் அனைவரும் செப்போன் வைத்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்துவதற்கும், சூதாட்டம் உள்ளிட்ட விளையாட்டு விளையாடுவதற்கும் பயன்படுத்துகின்றனர். ஆன்லைன் சூதாட்டம் தங்களை முற்றிலும் அடிமையாக்குவதுடன் பொருளாதார வீழ்ச்சியை ஏற்ப்படுத்தும். ஆரம்பத்தில் ஜாலியாக இருப்பது காலப்போக்கில் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கும்.

இதனால் உயிர்பலியும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர். சமூக ஆர்வலர் ஜிப்ரி கூறியது, செல்போன் பயன்படுத்தாதவர்களே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் முதல் அனைவரும் வைத்துள்ளனர். இதில் மாணவர்களும் இளைஞர்களும் பொழுது போக்கிற்காக ஆன்லைன் சூதாட்டம் ஆரம்பித்து அடிமையாகி விடுகின்றனர். இது சமுதாய சீரழிவை ஏற்படுத்தும். படிப்பு மற்றும் தொழிலில் கவனம் செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். அதனால் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பள்ளி, கல்லூரி மற்றும் பொது இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • noru-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டை புரட்டிப்போட்ட நோரு புயல்!: வெள்ளக்காடான குடியிருப்பு பகுதிகள்.. 52 ஆயிரம் பேர் பாதிப்பு..!!

  • field-paint-former-27

    விநாயகர், புறா, கருஞ்சிறுத்தை!: வயலில் ஓவிய சிற்பம்... பல்வேறு வடிவங்களில் அசத்தும் பொறியாளர்..!!

  • Tirupati

    திருப்பதி கோயில் பிரம்மோற்சவத்திற்கான அங்குரார்பணத்தில் விஷ்வ சேனாதிபதி ஊர்வலம்

  • nepal_snowfall

    நேபாளத்தில் பனிச்சரிவில் சிக்கி 2 மலையேற்ற வீரர்கள் உயிரிழப்பு; பலர் காயம்

  • italy-first-female

    இத்தாலியில் முதல் பெண் பிரதமராக ஜியோர்ஜியா மெலோனி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்