SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மங்கலம் அருகே நல்லம்மன் கோவிலில் பொங்கல் வழிபாடு

8/10/2022 5:00:12 AM

திருப்பூர், ஆக. 10:  திருப்பூரை  அடுத்த மங்கலம் அருகே நொய்யல் ஆற்றில் நல்லம்மன் தடுப்பணை உள்ளது. இந்த  தடுப்பணை கொங்கு சோழர்கள் காலத்தில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னர்  கட்டப்பட்ட தடுப்பணை ஆகும். இந்த அணை கட்டும் போது, அணை நடுவில் உடைந்து  கொண்டே இருந்த காரணத்தால், உடையும் பகுதியில் நல்லம்மன் என்ற சிறுமி உயிர்  தியாகம் செய்ததை அடுத்து அந்த அணை  கட்டப்பட்டு வலுவாக இருப்பதாகவும்,  இதனால் நல்லம்மனுக்கு வழித்தோன்றல்கள் ஆண்டுக்கு ஒரு முறை பொங்கல் வைத்து  படையல் வழிபாடு நடத்தி வருவதாக காலங்காலமாக இப்பகுதியை சேர்ந்த கிராம  மக்களின் பழக்க வழக்கமாக இருந்து வருகிறது.
 இந்நிலையில், நொய்யல்  ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக அணை நடுவிலுள்ள நல்லம்மன்  கோயில் முழுமையாக மூழ்கி இருக்கிறது. இந்த ஆண்டு பொங்கல் விழாவை கொண்டாட  முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து கோயில் விழா குழுவினர், ஆற்றங்கரையில்  பொங்கல் வழிபாடு நடத்த முடிவு செய்தனர். நல்லம்மன் தடுப்பணைக்கு அருகில்  செல்ல முடியாத நிலையில் வெள்ளம் தடுத்தபோதும், ஆற்றங்கரையில் பச்சை குடிசை  அமைத்து நல்லம்மனுக்கு பொங்கல் வைத்து படையல் வழிபாடு நடந்து வருகிறது.  இதில் ஏராளமான கலந்து கொண்டு பொங்கல் வைத்து சாமி தரிசனம் செய்து  வருகிறார்கள்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pakistan-hospital

    பாகிஸ்தானில் தேங்கி நிற்கும் வெள்ள நீரால் வேகமாக பரவும் மலேரியா: மருத்துவமனைகள் நோக்கி மக்கள் படையெடுப்பு..!!

  • temple-dubai-6

    துபாயில் பிரம்மாண்ட இந்து கோயில்!: சிவன், விஷ்ணு சன்னதியுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு திறப்பு.. கண்கவர் புகைப்படங்கள்..!!

  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்