SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அனுமதியில்லாமல் இருக்கும் கட்டிடங்களுக்கு அனுமதி பெற விண்ணப்பிக்கலாம்

8/9/2022 12:29:00 AM

திருவாரூர்,ஆக.9: திருவாரூர் மாவட்டத்தில் நகர் ஊரமைப்பு அனுமதி இல்லாமல் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு அனுமதி பெற விண்ணப்பிக்குமாறு மாவட்ட நகர் ஊரமைப்பு இணை இயக்குநர் வாழவந்தான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் கடந்த 2011ம் ஆண்டிற்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களுக்கு நகர் ஊரமைப்பு துறையால் அனுமதி வழங்கும் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள்படி கடந்த 14.6.2018-ல் அரசாணை வெளியிடப்பட்டன.

மேலும், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு மேலும் ஒருசந்தர்ப்பம் வழங்கும் விதமாக விண்ணப்பம் அளிப்பதற்கு மீண்டும் 6 மாதகாலம் கால நீட்டிப்பு அரசால் வழங்கப்பட்டுள்ளது. எனவே திருவாரூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ், விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.tn.gov.in/tcp என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவுசெய்யலாம் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் விபரங்களுக்கு கலெக்டர் அலுவலக இணைப்பு கட்டிடத்தில் இயங்கி வரும் மாவட்ட நகர் ஊரைமைப்பு அலுவலக மின் அஞ்சல் முகவரி tvrdtcp@gmail.com மற்றும் 04366 -290799 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு இணை இயக்குநர் வாழவந்தான் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nia-23-kerala

    பிஎஃப்ஐ இடங்களில் என்ஐஏ சோதனைக்கு கண்டனம்: கேரளாவில் முழு அடைப்பு; வாகன கண்ணாடி உடைப்பு; பெட்ரோல் குண்டு வீச்சு..!!

  • ship-22

    இஸ்ரேல் கடற்கரையில் 1300 ஆண்டுகள் பழமையான கப்பல் கண்டுபிடிப்பு..!!

  • putin-action-protest

    புடின் அதிரடி உத்தரவு! ரஷ்யா முழுவதும் வெடித்த போராட்டம் - நூற்றுக்கணக்கானோர் கைது

  • iran_ladies

    ஈரானில் கொடூரம்: ஹிஜாப் சரியாக அணியாத பெண்ணை அடித்துக்கொன்ற போலீஸ்... முஸ்லிம் பெண்கள் தொடர் போராட்டம்

  • INS_ship

    நீண்ட சேவையில் இருந்து விடைபெற்றது INS அஜய் போர்க்கப்பல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்