SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவாரூர் மாவட்டத்தில் ஓராண்டில் 1582 விவசாய மின் இணைப்புகள் வழங்கல்

8/9/2022 12:28:38 AM

திருவாரூர், ஆக. 9: திருவாரூர் மாவட்டத்தில் 1582 விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதையடுத்து தங்களின் 10 ஆண்டுக்கும் மேலான கனவு நிறைவேறி உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்தாண்டு மே மாதம் 7ம் தேதி திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதற்கு பின்னால் மக்களுக்கான பல்வேறு திட்டங்கள் ஓராண்டு காலத்திற்குள்ளாகவே முதல்வர் மு.க.ஸ்டாலின் மூலம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பொதுமக்களும் பல்வேறு அரசியல் கட்சியினரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில் முதல்வர்களில் சிறந்த முதல்வராகவும் திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் தேர்தல் நேரத்தில் அளித்த பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் அதில் ஒரு பகுதியாக ஓராண்டு காலத்திற்குள் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டமானது கடந்தாண்டு செம்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து விவசாய மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்திருந்த விவசாயிகளில் பலரும் அதன் பின்னர் வேறு நபர்களுக்கு நிலம் விற்பனை உட்பட பல்வேறு காரணங்களினால் நிலத்தின் பட்டா பெயர் மாற்றம் செய்வது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று 6 மாத காலத்திற்குள் இந்த பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் பின்னர் விவசாய மின் இணைப்புக்களுக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன. இதில் இறுதியாக ஒரு லட்சமாவது இணைப்பு வழங்கும் அனுமதியினை சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் 16ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியதுடன் இதற்கு முழு காரணமான மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் மின்துறை அதிகாரிகளை பாராட்டினார். இதனையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் ரூ.11 கோடியே 97 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் ஆயிரத்து 324 விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 2 ஆயிரத்து 951 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுவதற்கான வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. மேலும் அதன்பின்னரும் நடப்பாண்டில் மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் புதிய இணைப்புகள் வழங்கப்படவுள்ள இந்த திட்டத்தின் மூலம் மாவட்டத்திற்கென நிர்ணயியக்கப்பட்டுள்ள 850 மின்இணைப்புகளில் இதுவரையில் 3 மாத காலத்திற்குள் 258 மின்இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக மேற்பார்வை பொறியாளர் காளிதாஸ் தெரிவித்துள்ளார்.இந்த திட்டத்தினால் 10 ஆண்டுகளுக்கு மேலான தங்களின் கனவு நிறைவேறியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளதுடன் தமிழக முதல்வருக்கும் அரசுக்கும் மின்துறை அமைச்சருக்கும் பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

  • tirupati-brahmotsavam-28

    கோவிந்தா! கோவிந்தா!: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம்.. சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்