SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காரைக்காலில் கலைஞர் 4ம் ஆண்டு நினைவு நாள் எம்எல்ஏக்கள் நாஜிம், நாக தியாகராஜன் மலர் தூவி மரியாதை

8/8/2022 2:51:33 AM

காரைக்கால், ஆக. 8: மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு காரைக்கால் மாவட்ட திமுக சார்பில் காரைக்காலில் உள்ள தலைமை அலுவலகமான கலைஞர் அகத்தில் உள்ள கலைஞர் திருவுருவ படத்திற்கும் மற்றும் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் கலைஞர் முதுநிலை பட்ட மேற்படிப்பு வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் திருவுருவச் சிலைக்கு புதுச்சேரி மாநில கழக அமைப்பாளர் மற்றும் காரைக்கால் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் நிரவி திருப்பட்டினம் தொகுதி கழக பொறுப்பாளர் சட்டமன்ற உறுப்பினருமான நாக தியாகராஜன் கலந்து கொண்டு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார். இந்த நிகழ்ச்சியில் மாநில திமுக இளைஞர் அணி அமைப்பாளர் முஹம்மது ரிபாஸ், மாநில திமுக விவசாய அணி அமைப்பாளர் பிரபு, காரைக்கால் மாவட்ட திமுக வர்த்தக அணி அமைப்பாளர் கந்தாஸ் ராஜா, சிறுபான்மை அணி அமைப்பாளர் ஜாஹிர், திருபட்டினம் செல்வராஜ் உள்ளிட்ட மாநில கழக நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்