SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கருப்பணசாமி கோயிலில் 100 ஆடுகள் பலியிட்டு வழிபாடு

8/8/2022 2:38:59 AM

வடமதுரை, ஆக. 8: திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது தங்கமாபட்டி வண்டி கருப்பணசாமி கோயில். இங்கு நாள்தோறும் கிடாவெட்டு நடந்தாலும் ஆடி மாதம் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். இதனால் வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் இங்கு வந்து கிடா விருந்து வைப்பது வழக்கமாக உள்ளது. புதிய வாகனம் வாங்கினால் இங்கு வந்து பூஜை போடுவதும் பக்தர்களின் வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில் நேற்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட கிடாக்களை வெட்டி வழிபாடு நடத்தினர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நிற்கக்கூட இடம் இல்லாத சூழ்நிலை உருவானது.பக்தர்கள் அதிகம் வரும் இக்கோயிலுக்கு அவர்களின் வசதிக்காக கழிவறைகள் கட்டித் தர வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் இக்கோயிலில் கழிவறை வசதி இல்லாதது மிகவும் வருந்தத்தக்கது என வெளி மாவட்ட பக்தர்கள் தெரிவிக்கின்றனர். எனவே இதற்கான பணிகளை கோயில் நிர்வாகம் தொடங்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pakistan-hospital

    பாகிஸ்தானில் தேங்கி நிற்கும் வெள்ள நீரால் வேகமாக பரவும் மலேரியா: மருத்துவமனைகள் நோக்கி மக்கள் படையெடுப்பு..!!

  • temple-dubai-6

    துபாயில் பிரம்மாண்ட இந்து கோயில்!: சிவன், விஷ்ணு சன்னதியுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு திறப்பு.. கண்கவர் புகைப்படங்கள்..!!

  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்