SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மழை குறைந்ததால் மீன்பிடிக்க சென்றனர்; குறும்பனையில் இறால்மீன் வரத்து அதிகரிப்பு

8/8/2022 1:07:06 AM

குளச்சல், ஆக. 8: குளச்சல் அருகே, குறும்பனையில் 6 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்கச்சென்ற மீனவர்கள் வலையில் இறால்மீன்கள் அதிக அளவுபிடிபட்டன. குமரி  மாவட்ட கடல் பகுதியில் கடந்த 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை  பலத்த காற்று  வீசும் என்று மீன்துறை  எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து குமரி  மாவட்ட கட்டுமர மீனவர்கள் கடந்த ஒரு வாரமாக  மீன் பிடிக்க கடலுக்கு  செல்லவில்லை. இந்த நிலையில்  மழை சற்று குறைந்த நிலையில் நேற்றுமுன்தினம் குறும்பனை  மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அன்று மாலை சுமார் 6 மணியளவில்  அவர்கள் கரை திரும்பினர்.

கரை திரும்பிய மீனவர்களின் வலையில்  ஏராளமான இறால் மீன்கள் கிடைத்திருந்தன. 27 எண்ணம் கொண்ட இறால் மீன்கள் 1 கிலோ  எடையிருந்தது. ஒரு கிலோ இறால் மீன் ₹490 முதல் ₹510 வரை விலை போனது. இதை  மீன் வியாபாரிகள் போட்டிப்போட்டு ஏலம் கேட்டு வாங்கி சென்றனர். ஒரு வாரமாக  மீன் பிடித்தொழில் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இறால் மீன் பிடிபட்டதால் குறும்பனையில் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

  • tirupati-brahmotsavam-28

    கோவிந்தா! கோவிந்தா!: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம்.. சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்