SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருச்செந்தூரில் வீரமாடசுவாமி கோயில் கொடை விழா

8/6/2022 4:00:00 AM

திருச்செந்தூர், ஆக. 6:  திருச்செந்தூர் தேவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட வீரமாடசுவாமி கோயில் கொடை விழா நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலையில் ஆனந்தவிநாயகர் கோயிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வீதியுலா வந்து கோயிலுக்கு வந்தடைந்தது. நள்ளிரவு 12 மணிக்கு குடியழைப்பு தீபாராதனை, சாஸ்தா பிறப்பு வைபவம் நடந்தது. நேற்று அதிகாலை சுவாமிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை, மதியம் 1 மணிக்கு சுவாமிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. விழாவில் அனைத்து சமுதாய பிரமுகர்கள் மற்றும் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். மாலை 6 மணிக்கு பொங்கல் விடும் வைபவம் நடைபெற்றது. இரவு 1 மணிக்கு அலங்கார தீபாராதனை, தொடர்ந்து அதிகாலை 3 மணிக்கு படைப்பு தீபாராதனையும், அன்னதானமும் நடந்தது. ஏற்பாடுகளை திருச்செந்தூர் தேவர் சமுதாயம் நிர்வாக கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nia-23-kerala

    பிஎஃப்ஐ இடங்களில் என்ஐஏ சோதனைக்கு கண்டனம்: கேரளாவில் முழு அடைப்பு; வாகன கண்ணாடி உடைப்பு; பெட்ரோல் குண்டு வீச்சு..!!

  • ship-22

    இஸ்ரேல் கடற்கரையில் 1300 ஆண்டுகள் பழமையான கப்பல் கண்டுபிடிப்பு..!!

  • putin-action-protest

    புடின் அதிரடி உத்தரவு! ரஷ்யா முழுவதும் வெடித்த போராட்டம் - நூற்றுக்கணக்கானோர் கைது

  • iran_ladies

    ஈரானில் கொடூரம்: ஹிஜாப் சரியாக அணியாத பெண்ணை அடித்துக்கொன்ற போலீஸ்... முஸ்லிம் பெண்கள் தொடர் போராட்டம்

  • INS_ship

    நீண்ட சேவையில் இருந்து விடைபெற்றது INS அஜய் போர்க்கப்பல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்