SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பழநி அருகே பைனான்சியர் கொலையில் மனைவி உள்பட 4 பேர் கைது: 6 மாதங்களுக்கு பின் நடவடிக்கை

8/6/2022 3:57:49 AM

பழநி, ஆக. 6: பழநி அருகே பைனான்சியர் கொலை வழக்கில் 6 மாதங்களுக்கு பின் மனைவி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பழநி அருகே சத்திரப்பட்டிய சேர்ந்தவர் ஓமந்தூரான் (46). கேரள மாநிலத்தில் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி குடும்ப பிரச்னை காரணமாக கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஓமந்தூரானின் 16 வயது மகன் சத்திரப்பட்டி போலீசில் கிரிக்கெட் மட்டையுடன் சரணடைந்தார். போலீசார் அவரை கைது செய்தனர்.

இந்நிலையில் ஓமந்தூரானின் தந்தை ரங்கசாமி தனது மகனின் கொலை வழக்கை மறு விசாரணை செய்ய வலியுறுத்தி புகார் அளித்தார். அதன்பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் கொலை வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதும், ஓமந்தூரான் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதுதொடர்பாக நடந்த விசாரணையில் போலீசார் ஓமந்தூரானின் மனைவி பாண்டீஸ்வரி (37), இவரது சித்தி கிருஷ்ணவேணி (55), மாமா ராமையா (62), அத்தை லட்சுமி (50) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். கொலை வழக்கு தொடர்பாக நடந்த மறுவிசாரணையில் 6 மாதங்களுக்கு பிறகு மனைவி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்