SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாலிபரை கத்திரியால் குத்தியவர் கைது

8/6/2022 3:56:06 AM

நெல்லை, ஆக.6: பாளை அருகே கூடைபந்து விளை யாட்டு கம்பம் அகற்றியது தொடர்பாக ஏற்பட்ட தகராறில்  வாலிபரை கத்திரிக்கோலால் குத்திய வரை போலீசார் கைது செய்தனர்.
பாளை  திருவண்ணநாதபுரம் பொட்டல் பகுதியில் தேவாலயத்திற்கு சொந்தமான  காலியிடம் உள்ளது. இந்த இடத்தில் பொட்டல் ஜோதி தெருவைச்  சேர்ந்த சுரேஷ் (29) என்பவர் கூடைப்பந்து விளையாடுவதற்காக இரும்பு கம்பம்  நட்டு வைத்துள்ளார். அதை அதேபகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (39) என்பவர், அகற்றியதாக கூறப்படுகிறது.

இதனால் 2 பேருக்கும் இடையே  ஏற்பட்ட வாக்குவாதத்தில் செல்வக்குமார் தான் மறைத்து வைத்திருந்த  கத்திரிக்கோலால் சுரேஷ் வயிற்றில் குத்தினார். இதில் காயம் அடைந்த அவர் நெல்லை  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து  அவர் பாளை போலீசில் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி எஸ்ஐ சிவகளை,  செல்வகுமாரை கைது செய்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nia-23-kerala

    பிஎஃப்ஐ இடங்களில் என்ஐஏ சோதனைக்கு கண்டனம்: கேரளாவில் முழு அடைப்பு; வாகன கண்ணாடி உடைப்பு; பெட்ரோல் குண்டு வீச்சு..!!

  • ship-22

    இஸ்ரேல் கடற்கரையில் 1300 ஆண்டுகள் பழமையான கப்பல் கண்டுபிடிப்பு..!!

  • putin-action-protest

    புடின் அதிரடி உத்தரவு! ரஷ்யா முழுவதும் வெடித்த போராட்டம் - நூற்றுக்கணக்கானோர் கைது

  • iran_ladies

    ஈரானில் கொடூரம்: ஹிஜாப் சரியாக அணியாத பெண்ணை அடித்துக்கொன்ற போலீஸ்... முஸ்லிம் பெண்கள் தொடர் போராட்டம்

  • INS_ship

    நீண்ட சேவையில் இருந்து விடைபெற்றது INS அஜய் போர்க்கப்பல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்