SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நெல்லை மாவட்டத்தில் மது விற்ற 3 பேர் கைது 28 பாட்டில்கள் பறிமுதல்

8/6/2022 3:55:55 AM

நெல்லை, ஆக.6: நெல்லை மாவட்டத்தில் மதுபானம் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றதாக 2 பேரையும், கள் விற்ற வழக்கில் ஒருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 28 மதுபாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டன. நெல்லை மாவட்டத்தில் டாஸ்மாக் கடையில் மதுபானங்களை வாங்கி பதுக்கி வைத்து, பின்னர் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட எஸ்பி சரவணனுக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து அவர் மாவட்டம் முழுவதும் மதுபானம் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்நிலைய போலீசாருக்கு உத்தரவிட்டார்.  இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு நடத்தி வருகின்றனர். பழவூர் எஸ்ஐ பார்த்தீபன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதியில் மதுபானம் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்ற முத்து என்பவரை கைது செய்தார். அவரிடம் இருந்து 23 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுபோல் வி.கே.புரம் எஸ்ஐ முருகேசன் ரோந்து பணியின் போது முப்பிடாதி அம்மன் கோயில் அருகே மதுபானம் பதுக்கி விற்ற ஈஸ்வரனை கைது செய்து அவரிடம் இருந்து 5 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தார்.

மேலும் பத்தமடை பகுதியில் எஸ்ஐ கணேசன் ரோந்து பணியில் இருந்த போது மணிமுத்தான்குளம் பகுதியில் கள்ளு விற்பனை செய்த நடராஜன் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த ஒன்றரை லிட்டர் 'கள்' பறிமுதல் செய்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

  • tirupati-brahmotsavam-28

    கோவிந்தா! கோவிந்தா!: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம்.. சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்