SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சேத்தியாத்தோப்பில் பள்ளிக்கு செல்லும் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்

8/6/2022 3:51:04 AM

சேத்தியாத்தோப்பு, ஆக.6: சேத்தியாத்தோப்பில் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் சாலையில் மேம்பாலத்துக்கு கீழ் பகுதியில் நிரந்தரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களால் மாணவர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சேத்தியாத்தோப்பு மேல்நிலைப்பள்ளி சாலையில் 2 அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளும், அரசு தொடக்கபள்ளியும் இயங்கி வருகின்றன. மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் இயங்கி வருகிறது. இதன் காரணமாக சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் தினந்தோறும் பள்ளிகளுக்கு வந்து செல்கின்றன.

பள்ளி வாகனங்களும் அதிகளவில் வந்து செல்கிறது. இதுதவிர அவசர சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு வந்து செல்லும் 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு போன்ற அவசர வாகனங்களும் இச்சாலையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இச்சாலையில் மேம்பாலத்தின் கீழ்பகுதியில் அனைத்து வாகனங்களும் செல்ல முடியாத அளவுக்கு போக்குவரத்துக்கு இடையூறாக கார்களும், மினி வேன்களும் நிரந்தரமாக நிறுத்தி வைத்துள்ளனர். இச்சாலையை தற்போது வாகனங்கள் நிறுத்தும் இடமாக பயன்படுத்தி வருவதால், சென்னிநத்தம், கிளாங்காடு ஆகிய 2 கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு விபத்துகளும் ஏற்படுகின்றன.

 கடந்த 2 தினங்களுக்கு முன்பு கூட பள்ளி மாணவிகள் இந்த மேம்பால பகுதியை கடக்க முயன்ற போது இடிபாடுகளில் சிக்கி லேசான காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து மேல்நிலைப்பள்ளி சாலையில் மேம்பாலத்தின் கீழே நிற்கும் வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிளாங்காடு, சென்னிநத்தம் கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pakistan-hospital

    பாகிஸ்தானில் தேங்கி நிற்கும் வெள்ள நீரால் வேகமாக பரவும் மலேரியா: மருத்துவமனைகள் நோக்கி மக்கள் படையெடுப்பு..!!

  • temple-dubai-6

    துபாயில் பிரம்மாண்ட இந்து கோயில்!: சிவன், விஷ்ணு சன்னதியுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு திறப்பு.. கண்கவர் புகைப்படங்கள்..!!

  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்