2,690 மையங்களில் நாளை தடுப்பூசி முகாம்
8/6/2022 3:48:33 AM
சேலம், ஆக. 6: சேலம் மாவட்டத்தில் 33வது கட்டமாக நாளை 2,690 மையங்களில் நடக்கும் தடுப்பூசி முகாமில், ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சேலம் மாவட்டத்தில் இதுவரை 12 வயதிற்கு மேற்பட்ட 29,10,195 நபர்களுக்கு முதல் தவணையும், 25,79,552 நபர்களுக்கு இரண்டாம் தவணையும் ெகாரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட 32 முகாம்களில், 21,57,999 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து நாளை (7ம் தேதி) 33வது சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. மாவட்டத்தில் இதுவரை 1,59,314 ேபருக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை முகாம் நடைபெறவுள்ளது. இதற்கென ஊரகப்பகுதியில் 2,315 மற்றும் மாநகராட்சி பகுதியில் 375 என மொத்தம் 2,690 மையங்கள் நிறுவப்பட்டு 15,500க்கும் மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் தற்போது கோவிசீல்டு தடுப்பூசி 56,380 டோஸ்களும், கோவேக்சின் 49,060 டோஸ்களும், கோர்பிவாக்ஸ் 10,980 டோஸ்களும் கையிருப்பில் உள்ளன.
இதற்கென ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய 4,28,632 ஊசி குழல்கள் கையிருப்பில் உள்ளன. இந்த முகாமில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே, இதுவரை பொதுமக்கள் அனைவரும் ஆதார்அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் அட்டை போன்ற அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை தவறாமல் எடுத்து வந்து, தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
தனியார் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை
கண்ணனூர் மாரியம்மன் கோயிலில் தீ மிதி விழா
காங்கிரசார் பாதயாத்திரை
சேலத்தில் 52 பேருக்கு கொரோனா பாதிப்பு
திமுக செயலாளராக ரகுபதி தேர்வு
கண்ணனூர் மாரியம்மன் கோயிலில் ஆடி திருவிழா
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!