மஸ்கட்டில் சிக்கித் தவிக்கும் 8 மீனவர்களை மீட்க வேண்டும் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
8/6/2022 3:45:37 AM
சென்னை: ஓமன் நாட்டிலுள்ள மஸ்கட்டில் சிக்கித் தவிக்கும் 8 மீனவர்களை மீட்க தூதரக அளவிலான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து, அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் மீன்பிடி தொழிலுக்கு சென்ற கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 8 மீனவர்களின் விசா காலாவதியானதாலும், ஓமன் நாட்டவரால் அவர்களுக்கு ஊதிய நிலுவைத் தொகை வழங்கப்படாததாலும் தாயகம் திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கும் மீனவர்களின் அவலநிலையைக் குறிப்பிட்டு, அவர்களை மஸ்கட்டிலிருந்து திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளை விரைவுபடுத்தி, தூதரக அளவில் தேவையான அனைத்து உதவிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
கடை பூட்டை உடைத்து ரூ.70 ஆயிரம் கொள்ளை
திருவொற்றியூர் மண்டலம் 4வது வார்டில் கிடப்பில் மழைநீர் கால்வாய் பணி: விரைந்து முடிக்க கோரிக்கை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் பிடிபட்டனர்
அண்ணாநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ
சென்னை எம்டிசி பஸ்களை தனியாருக்கு வழங்குவதா? அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி
அனுமதிக்கப்பட்ட ஊர்வலம் காரணமாக சென்னையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிவிப்பு
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!