SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கார் விற்பனை செய்வதாகபண மோசடி செய்தவர் மீது வழக்கு

8/5/2022 3:46:40 AM

வடமதுரை: வடமதுரை அருகே உள்ள அம்மாபட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (25). இவரது மனைவி அழகேஸ்வரி. கம்பிளியம்பட்டியில் செல்போன் சர்வீஸ் கடை நடத்தும் கிருஷ்ணமூர்த்தி பழைய கார் வாங்க விரும்பி இணையத்தில் தேடினார், அப்போது சென்னை, திருவான்மியூரைச் சேர்ந்த சுதர்சன் என்பவர், தன்னை ஒரு ராணுவ வீரர் என்று அறிமுகம் செய்து கொண்டார், அவரது காரை விற்பனை செய்ய விரும்புவதாக கூறி, அவரது ஆதார் அட்டை மற்றும் ராணுவ வீரர் உடை அணிந்த புகைப்படத்தை கிருஷ்ணமூர்த்தியின் செல்போனுக்கு அனுப்பியுள்ளார். இதையடுத்து ரூ.42 ஆயிரத்தை சுதர்சனுக்கு கிருஷ்ணமூர்த்தி அனுப்பினார். காரை கொடுத்தவுடன் மீதிப்பணத்தை தருவதாக கூறி உள்ளார். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட சுதர்சன் காரை அனுப்பாமல் தன் செல்போன் இணைப்பை துண்டித்தார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கிருஷ்ணமூர்த்தி வடமதுரை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த ்போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்