SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

75வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம் ரஞ்சன்குடிகோட்டை மேல் சுவரில் லேசர் விளக்கு வெளிச்சத்தில் தேசியக்கொடி

8/5/2022 12:27:02 AM

பெரம்பலூர், ஆக.5: நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மா வட்ட சுற்றுலாத் தலமான ரஞ்சன்குடி கோட்டை மேல் சுவரில் 30 அடி நீளத்திற்கு லேசர் விளக்கு வெளிச்சத்தில் தேசியக்கொடியை தேசிய நெடுஞ்சாலையில் பயணிப்போரும், சுற்று வட்டார கிராமப்பொதுமக்களும் கண்டுகளிக்கின்றனர். பெரம்பலூர் மாவட்டத்திற்கு வரலாற்று ரீதியாகப் பெருமை சேர்க்கும் சுற்றுலாத்தலம் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ரஞ்சன்குடியிலுள்ள கோட்டை இருந்து வருகிறது. இது கிபி 16ம் நூற் றாண்டின் இறுதியில் தூங்கானை மறவன் என்றக் குறுநிலமன்னரால் தொட ங்கப்பட்டு ஜாஹிர்தாரால் கட்டி முடிக்கப்பட்டது.பெரம் பலூர் மாவட்ட சுற்றுலாத்த லமான இந்தக்கோட்டை, சந்தாசாகிப்- பிரெஞ்சு கூட் டுப்படைக்கும்,முகமது அலி -ஆங்கிலேய கூட்டுப் படை க்கும் இடையே 1751ம் ஆ ண்டு நடந்த வால்கொண் டா போரில் முக்கியப்பங் காற்றியது என்பதற்கு வர லாற்றுஆதாரங்கள் உள் ளன.

இதில் இன்றளவும் பிரதான நுழைவுவாயில், அகழிகள், விதான மண்ட பம், பீரங்கி மேடை, கொடி மேடை, தண்டனைக் கிண று, வெடிமருந்துக் கிடங்கு, புறவழி சுரங்கப்பாதை, பா ண்டியர்காலத்து மண்டபம், முகமதியர் காலத்து மசூதி கள், இயற்கை சீற்றங்களா லும் பாதிக்கப்படாதபடி, து ளைகள் இடப்பட்ட சுற்றுச் சுவர், தண்டனைக்கிணறு, கோட்டை உச்சியில், கடல் மட்டத்தில் இருந்து 152அடி உயரத்தில் அழகியக் குள மும் அழியாமல் உள்ளது. இத்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக்கோட்டை பெரம்பலூர் மாவட்ட சுற்றுலா த் தலமாக விளங்குகிறது. பொதுவாக உலக நாடுகளி ல் சுதந்திரதினம், ராணு தினம், போரில் வென்ற தினம், சர்வதேச விளையாட் டுப் போட்டிகள் நடப்பதை தெரிவிப்பது, புகழ்பெற்ற பண்டிகைகளான கிறிஸ் மஸ், ரம்ஜான் கொண்டாடு ம் தினங்கள், நாட்டில் புரட் சி வெடித்த தினங்கள் உள் ளிட்ட முக்கிய நாட்களில் அந்நாட்டின் உயர்ந்த கோ புரங்களில், உயர்ந்த பனி மலைச் சிகரங்களில் தேசி யக்கொடி நிறத்தில் லேசர் விளக்குகள் கொண்டு இர வில் ஒளிரச் செய்வார்கள். இதற்காக உலகின்மிக உய ரமான கட்டிடமான துபாய் புர்ஜ் கலீஃபா, சீனாவின் ஷாங்காய் டவர், நியூயார் க்கின் உலக வர்த்தக மை யம், வட துருவத்திலுள்ள நார்வே பனிமலைச்சிகரம், மலேசியக் கோபுரம் உள்ளி ட்டவற்றில் லேசர் விளக்கு களை ஒளிரச்செய்வது வழ க்கம்.

இந்நிலையில் இந்திய நாட்டின் 75வது சுதந்திர தினத்தை வீடுதோறும் தேசியக் கொடியேற்றி கொண்டாட பாரதப் பிரதமர் மோடி அறி வுறுத்தியிருக்கும் நிலையி ல், இந்தியத் தொல்லியல் துறை புதுமையாக தனது கட்டுப்பாட்டிலுள்ள புராதன சின்னங்களான கோட்டைச் சுவர்களில் தேசியக்கொடி நிறத்தில் இரவுநேரத்தில் லேசர் விளக்குகளை ஒளி ரச் செய்ய ஏற்பாடு செய்து ள்ளது. இதன்படி இந்திய தொல்லியல் துறையின் சென்னை வட்டம், பாண்டி ச்சேரி உட்கோட்ட கட்டுப்பா ட்டில் பெரம்பலூர் மாவட்டம் மங்கலமேடு அருகேயுள்ள ரஞ்சன் குடிக்கோட்டையில் ஆக-2ம்தேதி முதல் சுதந்தி ர தினமான 15ம்தேதிவரை தினமும் மாலை 6 மணி முதல் இரவு 10மணி வரைக்கும், கோட்டை மேல்சுவரில் 30அடி நீளத்திற்கு மூவர்ண கொடி நிறத்தில் லேசர் வி ளக்குகளால் வெளிச்சம் பா ய்ச்சப்படுகிறது. இதனை சாதாரணமாக திருச்சி - செ ன்னை தேசிய நெடுஞ்சா லையில் பஸ்களில் பயணி ப்போர்கூட மேற்கே திரும்பி னால் லேசர் ஒளியில் தேசி யக்கொடி தகதகப்பது தெரி கிறது. மேலும் ரஞ்சன்குடி மட்டுமன்றி, மங்களமேடு, தேவையூர், தம்பை, வாலிக ண்டபுரம்,பாத்திமாபுரம், மே ட்டுப்பாளையம், சாத்தன வாடி ஆகிய சுற்றுவட்டார கிராமப் பொதுமக்களும் தங்கள்ஊர்களில் இருந்து கண்டுகளித்து சுதந்திர தி னத்தைக்கொண்டாட ஏக்க முடன் எதிர்பார்த்திருக்கின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • erode-dmk-votes-2

  அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!

 • scotland-bonfire-festival

  ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி

 • stalin-corp-31

  மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

 • long-whale-newyork

  35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

 • pak-blast-30

  பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்