SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திண்டுக்கல் சிலுவத்தூர் ரோடு குளத்தில் கழிவுநீர் கலப்பால் ‘கப்’.

8/4/2022 5:35:22 AM

திண்டுக்கல், ஆக. 4:  திண்டுக்கல்  மாநகராட்சிக்குட்பட்ட முத்துசாமி குளம், சிலுவத்தூர் ரோடு குளம், கோட்டை  குளம், கோபால் சமுத்திரம் உள்ளிட்ட குளங்கள் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு  தூர்வாரப்பட்டு மழைநீர் சேகரிப்பு மையமாக அமைக்கப்பட்டது. இந்நிலையில்  சிலுவத்தூர் ரோட்டில் உள்ள குளத்தை சுற்றி நாராயண தாஸ் காலனி, கே.கே. நகர்,  ஏஆர். நகர் உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து  வருகின்றனர். இந்த குளத்தின் கரையில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில்  தினந்தோறும் இப்பகுதி மக்கள்  காலையிலும், மாலையிலும் நடைபயிற்சி செய்து  வருகின்றனர். இதனிடையே கடந்த சில நாட்களாக திண்டுக்கல் நகர், புறநகர்  பகுதியில் நல்ல மழை பெய்தது. குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும்  கழிவுநீர் குளத்தில் கலந்து விடாமல் இருப்பதற்காக குளத்தை சுற்றி தனியாக  கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டு கோபால் நகர் விஸ்திரிப்பு பகுதி வழியாக  தீப்பாச்சி அம்மன் கோவில் வரை செல்கிறது. இந்நிலையில் குளத்தின் தெற்கு  பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் நீண்ட நாட்களாக தூர்வாரப்படாததால் சில  தினங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு  குளத்தில் கழிவுநீருடன், குப்பை கழிவுகளும் கலந்து விடுகிறது. இதனால்  குளத்தில் கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது.  இதனால்  நடைபயிற்சி செய்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே மாநகராட்சி  நிர்வாகம் உடனே கழிவுநீர் கால்வாய் அடைப்பை சரிசெய்வதுடன் குளத்தையும்  தூர்வாரி குப்பைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி  மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்