SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 ஆயிரம் உதவி தொகை வழங்க கோரிக்கை

8/4/2022 5:30:58 AM

பண்ருட்டி, ஆக. 4: தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் மாநாடு நடந்தது. மாவட்ட தலைவர் ராஜா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராசையன், இணை செயலாளர் ஜீவா, மாவட்ட செயலாளர் ஆளவந்தார் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் நம்பிராஜன், மாநில தலைவர் ஜான்சிராணி ஆகியோர் கலந்துகொண்டு மாநாட்டை துவக்கி வைத்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கு கேரளாவை போல் மாத உதவித் தொகை ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். சிறு தொழில் செய்ய மானியத்துடன் வங்கி கடன் வழங்க வேண்டும். அரசு மருத்துவமனையில் வழங்கும் அடையாள அட்டை சான்றில் 2 ஆண்டு என்பதற்கு பதில் நிரந்தரம் என வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பில் 4 மணி நேர வேலை முழு ஊதியம் ரூ.281 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் நடேசன், மாவட்ட குழு உறுப்பினர் உதயகுமார், சிபிஎம் நகர செயலாளர் உத்திராபதி, நகர தலைவர் கலியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pakistan-hospital

    பாகிஸ்தானில் தேங்கி நிற்கும் வெள்ள நீரால் வேகமாக பரவும் மலேரியா: மருத்துவமனைகள் நோக்கி மக்கள் படையெடுப்பு..!!

  • temple-dubai-6

    துபாயில் பிரம்மாண்ட இந்து கோயில்!: சிவன், விஷ்ணு சன்னதியுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு திறப்பு.. கண்கவர் புகைப்படங்கள்..!!

  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்