குப்பையை தொட்டியில் போடுங்க பழநியில் கோலமிட்டு நூதன விழிப்புணர்வு பிரசாரம்
7/29/2022 7:31:07 AM
பழநி, ஜூலை 29: குப்பைகளை தொட்டியில் போட வலியுறுத்தி பழநியில் கவுன்சிலர் கோலம்போட்டு நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கோயில் நகரான பழநியை குப்பையில்லா தூய்மையான நகராக மாற்ற பழநி நகராட்சி சார்பில் தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக பழநி நகரில் உள்ள 33 வார்டுகளிலும் கலை நிகழ்ச்சிகள் நடத்தியும், முக்கிய இடங்களில் விளம்பர பலகைகள் வைத்தும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரிப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக பழநி 6வது வார்டில் திமுக கவுன்சிலர் வீரமணி குப்பைகளை குப்பை தொட்டியில் கொட்டாமல் கீழே கொட்டுவதை தடுக்க கோலம் போட்டு நூதன விழிப்புணர்வில் ஈடுபட்டார். 6வது வார்டிற்குட்பட்ட இந்திரா நகர் பகுதியில் குப்பைகள் அதிகம் கொட்டப்படும் பகுதியில் பெண்களைக் கொண்டு சுத்தம் செய்து, கோலம் போட வைத்து, குப்பைகளை கீழே போடாமல், குப்பை தொட்டியில் மட்டும் போடும் வண்ணம் கவுன்சிலர் மேற்கொண்ட நடவடிக்கை வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை பார்த்த பல கவுன்சிலர்கள், தங்களது வார்டுகளிலும் இதே நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
திண்டுக்கல் வடக்கு, தெற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் நியமனம் திமுக தலைமை கழகம் அறிவிப்பு
சுங்கச்சாவடி வேண்டாம் சாணார்பட்டி பகுதி மக்கள் கோரிக்கை
முன்னாள் படை வீரர்களுக்கு மார்ச் 30ல் குறைதீர் கூட்டம்
மகாராஷ்டிரா, கர்நாடகாவில் இருந்து வரத்து அதிகரிப்பு திண்டுக்கல் மார்க்கெட்டில் 2,000 மூட்டை வெங்காயம் தேக்கம்: விலையும் குறைந்ததால் விவசாயிகள் கவலை
நிலக்கோட்டை மேட்டுப்பட்டியில் சித்தமகாலிங்க சாமி கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்
பழநி அருகே ரேஷன் அரிசி பதுக்கிய ரைஸ் மில் அதிபர் கைது
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி