SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குமரி மாவட்டத்தில் 4 வழி சாலை பணிகளை விரைவாக தொடங்க வேண்டும்

7/29/2022 2:47:30 AM

நாகர்கோவில், ஜூலை 29: குமரி மாவட்டத்தில் 4 வழி சாலை பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் நிதின்கட்கரியை விஜய்வசந்த் எம்.பி நேரில் சந்தித்து வலியுறுத்தினார். விஜய்வசந்த் எம்.பி அலுவலக செய்திகுறிப்பு: ஒன்றிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை விஜய்வசந்த் எம்.பி சந்தித்து கன்னியாகுமரி மாவட்ட மக்களின் சார்பாக கோரிக்கைகளை முன்வைத்தார். காரோடு-காவல்கிணறு இடையே நான்கு வழி பாதை சாலை பணிகள் முடிவடையாமல் இருப்பதை சுட்டிக்காட்டி அதனை தக்க நடவடிக்கைகள் மூலமாக விரைவில் முடித்து வைக்க கேட்டுக்கொண்டார். கல், மண், பற்றாக்குறையினால் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் காலதாமதத்தை காரணம் காட்டி ஒப்பந்தம் ரத்து செய்ததை விஜய்வசந்த் எடுத்து கூறினார்.

தற்போது மாநில அரசு அண்டை மாவட்டங்களில் இருந்து கல், மண் தர ஒப்புக்கொண்ட நிலையில் புதிய ஒப்பந்ததாரரை முடிவு செய்து பணியை விரைவாக தொடங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். தற்போதைய தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பிற்காக சுமார் ₹15 கோடி பெற்று தந்தபோதிலும் அதற்கான பணிகள் தொடங்காமல் இருப்பதை எடுத்துகூறி சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அறிவுறுத்தி அப்பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நாகர்கோவில் அப்டா மார்க்கெட் - காவல்கிணறு இடையேயான நான்கு வழிச்சாலை பொதுமக்களின் பயணத்திற்காக திறந்து கொடுக்க வேண்டும் எனவும், அந்த சாலையில் டோல் கட்டணம் பிரிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். அத்துடன் நான்கு வழி சாலைக்காக நிலத்தை விட்டுத்தந்த நில உரிமையாளர்களுக்கு கொடுக்க வேண்டிய தொகை நிலுவையை உடனடியாக கொடுத்து மேலும் அனைவரும் ஒரு போல் பயனடையும் வகையில் நிவாரணத்தொகை மறு ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

  • tirupati-brahmotsavam-28

    கோவிந்தா! கோவிந்தா!: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம்.. சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்