SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நித்திரவிளை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

7/29/2022 2:47:22 AM

நித்திரவிளை, ஜூலை 29:    நெல்லை மாவட்டத்தில்  இருந்து நேற்று அதிகாலை குமரி மாவட்டம் வழியாக 2 வாகனத்தில் ரேஷன் அரிசி கேரளாவுக்கு  கடத்தி செல்வதாக நித்திரவிளை காவல் நிலைய தனிப்பிரிவு ஏட்டு ஜோசுக்கு தகவல்  கிடைத்தது. நித்திரவிளை காவல் நிலைய போலீசார் விரிவிளை,  மங்காடு பகுதியில் மாறுவேடத்தில் நின்று கண்காணிப்பு பணியில்  ஈடுபட்டனர். அப்போது, குறிப்பிட்ட 2 வாகனங்களும் காலை 9  மணியளவில் விரிவிளை பகுதியில் வந்துள்ளன. இதைக்கண்ட போலீசார் வாகனத்தை  நிறுத்துமாறு சைகை காட்டியதும் டிரைவர் நிறுத்தாமல் சென்றுள்ளார். உடனே தனிப்பிரிவு ஏட்டு ஜோஸ் மற்றும் நித்திரவிளை காவல் நிலைய ஏட்டு  சவுந்தர்  ஆகிய  2 பேரும் மற்ற காவலர்களுக்கு தகவல் கொடுத்து விட்டு 2 பைக்கில்  பின்தொடந்து சென்றனர். சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் நடைக்காவு  ஆலங்கோடு திருப்பத்தில் வைத்து அரசு பேருந்து நித்திரவிளை சாலையில் வரவே  கடத்தல் வாகனங்கள் முன்னோக்கி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து  பின்தொடர்ந்து சென்ற தனிப்பிரிவு ஏட்டு ஜோஸ் மற்றும் நித்திரவிளை காவல்  ஏட்டு  சவுந்தர்  இரண்டு பேரும் ஓடிச் சென்று  இரண்டு வாகனங்களையும் மடக்கி  பிடித்தனர். இதில் சொகுசு காரில் இருந்த டிரைவர் சிக்கினார், மினி  டெம்போவில் இருந்த டிரைவர் இறங்கி ஓடிவிட்டார்.  தொடர்ந்து சொகுசு கார்  மற்றும் மினி டெம்போவை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். இதில்   போலீசாரிடம் சிக்கிய சொகுசு கார் டிரைவர் மஞ்சாலுமூடு பகுதியை சார்ந்த  ஆனந்த (24) என்றும் சொகுசு கார் மற்றும் மினி டெம்போவில் தலா இரண்டு டன்  ரேஷன் அரிசி வீதம் நான்கு டன் ரேஷன் அரிசி இருந்ததும்  காஞ்சாம்புறம்  பகுதியை சார்ந்த கடத்தல் தொழில் செய்யும் இரண்டு நபர்களுக்கு இந்த  கடத்தலில்  தொடர்பு உள்ளதும், விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து  நித்திரவிளை போலீசார் வாகனத்தையும் ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • landslide-colombia

    கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்