புறநகர் மின்சார ரயில்களில் கைவரிசை: செல்போன் திருடிய 2 பேர் பிடிபட்டனர்
7/5/2022 5:38:06 AM
ஆவடி: புறநகர் மின்சார ரயில்களில் செல்போன் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர் செல்லும் மின்சார ரயில்களில் தினமும் ஏராளமான பயணிகள் சென்று வருகின்றனர். இதில் காலை, மாலை வேளைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். இத்தகைய சந்தர்ப்பங்களை பயன்படுத்தி, ரயில் பயணிகளிடம் செல்போன் பறிக்கும் சம்பவம் நடந்து வருகிறது. இதேபோல் ஆவடி, பட்டாபிராம் செல்லும் மின்சார ரயில்களில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆவடி பகுதியை சேர்ந்த பாலாஜி, ஆன்டோமரியா, விக்னேஷ் ஆகிய 3 பேரின் விலை உயர்ந்த செல்போன்களை மர்ம கும்பல் பறித்தது. புகாரின்பேரில் ஆவடி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம கும்பலை வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில், பட்டாபிராம் ரயில் நிலைய பகுதிகளில் நேற்று முன்தினம் ஆவடி ரயில்வே எஸ்ஐ சுந்தர்ராஜன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த 2 பேர் போலீசாரை பார்த்ததும் ஓடிமுயன்றனர். அவர்களை விரட்டி பிடித்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர். அதில் அவர்கள் ஆவடி, நந்தவனமேட்டூர் பகுதியை சேர்ந்த ராகேஷ் (21), சதீஷ்குமார் (20) என தெரியவந்தது. அவர்களிடம் 3 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் நகராட்சியில் அனைத்து வீடுகளிலும் பறக்கும் தேசிய கொடி; முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் லோக் அதாலத் பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு
பூண்டி ஊராட்சியில் 1232 வீட்டிற்கும் தேசிய கொடி
மடிப்பாக்கம் பிரின்ஸ் பள்ளியில் அறிவியல் கண்காட்சி துவக்க விழா; அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு
அனைத்து நிறுவனங்களிலும் தேசிய கொடி
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளில் கிராம சபை வரும் 15-ம் தேதி நடத்த வேண்டும்; கலெக்டர் அறிவிப்பு
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!