ராமாபுரத்தில் குடியிருப்புகளுக்கு பட்டா வழங்ககோரி தொடர் முழக்க போராட்டம்
6/28/2022 5:49:20 AM
பூந்தமல்லி: சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம் பகுதியில் சுமார் 2500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். தமிழக அரசு சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றும்பணி தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ராமாபுரம், திருமலை நகர் பகுதியில் ஆக்கிரமிப்புநிலங்கள் எனக்கூறி அப்பகுதியில் உள்ள வீடுகளை அகற்ற பெருநகர சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டல அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்ட வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதி மக்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில் திருமலை நகர் பகுதி மக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் தொடர் முழுக்கப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கையில் பதாகைகளை ஏந்தியும், கண்டன கோஷங்களை எழுப்பியும் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் குடிமனை பட்டா வழங்க கோரியும், 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் எங்களுக்கு நிலவகை மாற்றம் செய்து குடி மனை பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் கலந்து கொண்டார். இப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
மேலும் செய்திகள்
குளம், குட்டை அமைத்தல், தூர்வாருதல் இணையத்தில் பதிவேற்றுவது குறித்த கலந்துரையாடல் கூட்டம்
48 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1 .80 கோடி மதிப்பீட்டில் வீடு கட்ட ஆணை கலெக்டர் வழங்கினார்
சுதந்திர தினத்தை முன்னிட்டு 15ம் தேதி டாஸ்மாக் கடைகள் பார்கள் மூட வேண்டும்; கலெக்டர் உத்தரவு
தவணை பணம் செலுத்தாத வேன் உரிமையாளருக்கு அடி
சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் 50% அரசு மானியத்துடன் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது; மாவட்ட கலெக்டர் தகவல்
ரேஷன் அரிசி கடத்திய வாலிபருக்கு குண்டாஸ்
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!