திருக்கழுக்குன்றம் அடுத்த தண்டரை கிராமத்தில் ரூ. 2.22 கோடி மதிப்பீட்டில் பொது கட்டிடம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறப்பு: எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு
6/28/2022 5:44:46 AM
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அடுத்த தண்டரை கிராமத்தில் சிட்கோ நிர்வாக அலுவலகத்திற்கு ₹2.22 கோடி மதிப்பீட்டில், பொது கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், திருக்கழுக்குன்றம் அடுத்த தண்டரை கிராமத்தில் 44 ஏக்கரில் ஒருங்கிணைந்த சிட்கோ உள்ளது. இதில், ₹2 கோடியே 22 லட்சம் திட்ட மதிப்பில் வங்கி, நிர்வாக அலுவலகம், உணவகம், கூட்ட அரங்கு மற்றும் மருந்தகம் போன்ற வசதிகளுக்காக கட்டப்பட்ட பொது வசதி கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்த காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து தண்டரை கிராமத்தில் காஞ்சிபுரம் எம்பி ஜி.செல்வம், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, திருப்போரூர் ஒன்றிய சேர்மன் இதயவர்மன், சிட்கோ மேலாளர் பாரதி, தண்டரை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி அறிவழகன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி திட்ட விளக்கவுரையாற்றினர். இந்நிகழ்ச்சியில், ஏராளமான அரசு அதிகாரிகள் மற்றும் சிட்கோ ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
காஞ்சிபுரம் அருகே கஞ்சா விற்ற 2 இளைஞர்கள் கைது
கலைஞரின் நினைவு தினத்தையொட்டி திமுக சார்பில் அமைதி ஊர்வலம்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் மாடவீதியில் மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
அடையாறு ஆற்றங்கரையையொட்டி ரூ. 2 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு அதிகாரிகள் அதிரடி
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 3 லட்சம் பறித்த தம்பதி மனைவி கைது கணவனுக்கு வலை
பாலூரில் ரயில் மறியலால் பரபரப்பு
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!