உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு சத்து மாத்திரை சாப்பிட்ட 30 மாணவ, மாணவிகள் மயக்கம்
6/25/2022 6:43:30 AM
உளுந்தூர்பேட்டை, ஜூன் 25: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது பாலி புதுக்காலனி கிராமம். இங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் பயிலும் 70க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ஆசனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலம் செவிலியர்கள் சத்து மாத்திரை வழங்கி உள்ளனர். இதனை சாப்பிட்ட 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திடீரென வயிற்றுவலி ஏற்பட்டு மயக்கம் அடைந்ததால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பெற்றோர் பள்ளிக்கு சென்று தங்களது பிள்ளைகளை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மயக்கமடைந்ததால், கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே மருத்துவர்கள் மற்றும் சுகாதார குழுவினர் இந்த சத்து மாத்திரையால் பயப்பட தேவையில்லை என கூறி போதிய சிகிச்சை அளித்தனர். தகவல் அறிந்ததும் அரசு மருத்துவமனைக்கு வந்த மாவட்ட கல்வி அலுவலர் கலைச்செல்வன் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள், டிஎஸ்பி மகேஷ், இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் உள்ளிட்ட போலீசார் சம்பவம் குறித்து விசாரணை செய்தனர். இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகள்
40 வேளாண்மை பொருட்கள் விற்பதற்கு ஏற்பாடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 31 ஆயிரம் மெட்ரிக் டன் இருப்பு வைக்க வசதி
சேத்தியாத்தோப்பில் பள்ளிக்கு செல்லும் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்
பண்ருட்டி அருகே பரபரப்பு பெண் குழந்தை பெற்றெடுத்த 10ம் வகுப்பு பள்ளி மாணவி
ஒன்றிய துணை தலைவர் திடீர் தர்ணா
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 ஆயிரம் உதவி தொகை வழங்க கோரிக்கை
கொ.ஆத்தூர்-முத்துகிருஷ்ணாபுரம் இடையே பால பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!