விழுப்புரம் அருகே நள்ளிரவு விபத்து: செங்கல்சூளையில் வேலை முடிந்து வீட்டிற்கு சென்ற கணவன், மனைவி பலி
6/25/2022 6:43:17 AM
விழுப்புரம், ஜூன் 25: விழுப்புரம் அருகே நின்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரிமீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்தனர். விழுப்புரம் பையூர் மாரியம்மன்கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(65). இவரது மனைவி அம்சவள்ளி(54). இருவரும் பக்கிரிப்பாளையம் செங்கல்சூளையில் வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு வேலையை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தனர். சென்னை புறவழிச்சாலை முத்தாம்பாளையம் என்ற இடத்தில்வந்தபோது எதிரே நின்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் பின்பக்கத்தில் ேமாதியுள்ளனர்.
இதில் தூக்கிவீசப்பட்ட ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அம்சவள்ளி ரத்தக்காயங்களுடன் உயிருக்குபோராடிக்கொண்டிருந்தார். தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அம்சவள்ளியை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். செல்லும் வழியிலேயே அம்சவள்ளி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகள் மாலதி அளித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார், கண்டெய்னர் லாரிடிரைவரான தேனிமாவட்டம் தேவதானம்பட்டியைச் சேர்ந்த பாலமுருகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
40 வேளாண்மை பொருட்கள் விற்பதற்கு ஏற்பாடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 31 ஆயிரம் மெட்ரிக் டன் இருப்பு வைக்க வசதி
சேத்தியாத்தோப்பில் பள்ளிக்கு செல்லும் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்
பண்ருட்டி அருகே பரபரப்பு பெண் குழந்தை பெற்றெடுத்த 10ம் வகுப்பு பள்ளி மாணவி
ஒன்றிய துணை தலைவர் திடீர் தர்ணா
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 ஆயிரம் உதவி தொகை வழங்க கோரிக்கை
கொ.ஆத்தூர்-முத்துகிருஷ்ணாபுரம் இடையே பால பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!