தேனி அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தை மீட்பு
6/25/2022 6:41:12 AM
ஆண்டிபட்டி, ஜூன் 25:தேனி அருகே பூதிப்புரத்தில் சன்னாசியப்பர் கோயில் அருகே மரக்காமலை மலையடிவாரத்தில் தனியார் விவசாய தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் உள்ள கிணற்றில் சிறுத்தை தவறி விழுந்ததாக தேனி தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட நிர்வாகத்தினரும், தீயணைப்புத் துறையினரும் சிறுத்தையை மீட்பதற்கான பணியில் இறங்கினர். தீயணைப்பு துறையினர் கயிறு மற்றும் வலைகளை வைத்து கிணற்றில் விழுந்து சிறுத்தையை மீட்டு தேனி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் சிறுத்தையை மரக்காமலை வனப்பகுதியில் விட்டனர்.
முன்னதாக வனத்துறையினர் சிறுத்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். கிணற்றில் விழுந்த சிறுத்தைக்கு சுமார் ஒன்றரை வயது இருக்கும். வனப்பகுதியில் இருந்து சிறுத்தை வழிதவறியோ , தண்ணீரை தேடியோ விவசாய தோட்டத்திற்கு வந்து இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் பூதிப்புரம் தோட்ட பகுதிக்கு சிறுத்தை வந்ததில் கிணற்றில் தவறி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
மழைநீர் வடிகால்களில் அடைப்பு நீக்கும் பணி
வழிப்பறி செய்த சகோதரர்கள் கைது
சுதந்திர தின பவளவிழாவை முன்னிட்டு மேலூரில் காங்கிரசார் நடைபயணம்
மதுரை அருகே விபத்தில் ஓய்வு தலைமையாசிரியர் பலி லாரி டிரைவர் கைது
வீடு புகுந்து 8 பவுன் திருட்டு
வரதட்சணை புகாரில் கணவர் கைது
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!