தா.பழூர் மகா முத்துமாரியம்மன் கோயில் திருவிழா
6/25/2022 6:15:01 AM
தா.பழூர், ஜூன் 25:அரியலூர் மாவட்டம் தாபழூரில் பிரசித்தி பெற்ற மகா முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 22-ம் தேதி தொடங்கியது.இதில் உலக நன்மை வேண்டி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு வேள்வி பூஜை நடைபெற்று, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு பால்குடம் மற்றும் அலகு காவடி, பூங்கரகம் எடுத்தனர். பக்தர்கள் அனைவரும் ராஜவீதி வழியாக முக்கிய வீதிகளில் வலம் வந்து ஊர்வலம் வந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்று சுவாமி வீதியுலா மற்றும் அன்னதானம் நடைபெற்றது. பக்தி சிரத்தையுடன் நடைபெற்ற இந்த விழாவில் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
வேப்பந்தட்டையில் வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும் விவசாயிகள் சங்க மாநாட்டில் வலியுறுத்தல்
நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை சித்திரை கார் அறுவடை தொடங்கிய நிலையில் மேய்ச்சலுக்காக ஆந்திராவில் இருந்து வாத்துக்கள் வருகை
இராவங்குடி கிராமத்தில்நீர் மேலாண்மை பற்றிய உழவர் பெருவிழா
இன்றைய மின் தடை
அரியலூரில் கலைஞரின் 4ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
அஞ்சல் துறையை தனியாருக்கு தாரைவார்க்கும் மத்திய அரசைக் கண்டித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!