பொதுத்தேர்வில் சாதனை படைத்த கயத்தாறு அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
6/25/2022 6:04:59 AM
கயத்தாறு, ஜூன் 25: கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னப்பாண்டியன் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் காளியப்பன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் (பொறுப்பு) தேவி சுப்புலட்சுமி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை கலந்து கொண்டு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை பாராட்டி பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். மேலும் ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
12ம் வகுப்பு தேர்வில் 566 மதிப்பெண்கள் பெற்ற பாலசுப்பிரமணி, 520 மதிப்பெண்கள் பெற்ற பதரச் பாத்தியாள், 519 மதிப்பெண்கள் பெற்ற வினித்குமார் மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 373 மதிப்பெண்கள் பெற்ற மாதவன், 369 மதிப்பெண்கள் பெற்ற முத்துச்செல்வி, 368 மதிப்பெண்கள் பெற்ற காளீஸ்வரி ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. பொதுத்தேர்வில் சாதனை படைத்துள்ள மாணவர்கள் வினித்குமார், மாதவன் ஆகியோர் கயத்தாறு அருகேயுள்ள கிரஸ்ட் இன்டியா ஆதரவற்றோர் காப்பகத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு ஊக்கமளித்த காப்பக நிர்வாக இயக்குநர் பால்ரகு, ஆஸ்திரேலியாவை சேர்ந்த லென்பெசிங்காம் மற்றும் தாளாளர் சாந்தகுமாரி ஆகியோரும் விழாவில் கவுரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் சுரேஷ், ரவீந்திரகுமார் மற்றும் சுப்பாராஜ் செய்திருந்தனர்.
மேலும் செய்திகள்
மிரட்டல் வழக்கில் இருவர் கைது
கருங்குளம் கோயிலில் ஐம்பொன் ஐயப்பன் சிலை திருட்டு
தேசிய கொடி பயணத்துக்கு தூத்துக்குடியில் வரவேற்பு
புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லையில் சாலை விபத்து பகுதிகளில் சிறப்பு குழுவினர் ஆய்வு
போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு
வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தோணுகால் கிராம மக்கள் மனு
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!