செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும்: கலெக்டர் உத்தரவு
6/25/2022 5:46:14 AM
செங்கல்பட்டு, ஜூன் 25: செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் அனைவரும் அவசியம் முகக்கவசம் அணியவேண்டும் என மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் பொதுமக்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்ட அறிக்கை: செங்கல்பட்டு மாவட்டத்தில், கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக, பொதுமக்கள் அனைவரும் அவசியம் முகக்கவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் உரிய சமூக இடைவெளியினை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். அனைத்து வணிக விற்பனை கூடங்கள் மற்றும் உணவகங்களில் நுழைவு வாயிலில் கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினி பயன்படுத்துதல் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது. மேலும், உடல் வெப்பநிலையை வெப்பநிலைமானி கருவி மூலம் கண்காணிக்க வேண்டும்.
பொதுமக்கள் அனைவரும் முதல் தவணை, இரண்டாம் தவணை மற்றும் முன்னெச்சரிக்கை தவணை கொரோனா தடுப்பூசிகள் கட்டாயமாக போட்டுக் கொள்ளுதல், அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல், முறையாக முகக்கவசம் அணிதல், பொது இடங்களில் சமூக இடைவெளியை முறையாக பின்பற்றுதல் மூலமாகவும் கொரோனா நோய் தொற்றுலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. கொரோனா அறிகுறிகளான காய்ச்சல், தொண்டை வலி, நாவில் ருசி தெரியாமல் இருந்தால் ஆகியவை இருந்தால் அருகில் உள்ள மருத்துவமனைகளை அணுக வேண்டும். மேலும், அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை பிடித்த காவலருக்கு அரிவாள் வெட்டு
காஞ்சிபுரம் அருகே பரபரப்பு; அம்பேத்கர் சிலைக்கு காவித்துண்டு விசிக ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம் மாநகராட்சியில் பல்துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழில் முனைவோர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் ஆர்த்தி அறிவிப்பு
சிறுகாவேரிப்பாக்கம் ஜெஜெ நகரில் பராமரிப்பில்லாமல் பாழாகும் சமுதாய கூடம்; சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
கீழம்பி கிராம ஊராட்சி பள்ளிக்கு ரூ. 17.36 லட்சம் மதிப்பீட்டில் 2 கூடுதல் வகுப்பறை கட்டிடம்; எழிலரசன் எம்எல்ஏ திறந்து வைத்தார்
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!