சபலத்தில் மயங்கிய வாலிபரிடம் ரூ.5 ஆயிரம் டெபிட் கார்டு அபேஸ்: 4 பெண்களுக்கு வலை
6/25/2022 1:16:26 AM
அண்ணாநகர்: காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் (27), வடபழனியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி, சமையல் வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு தனது ஊருக்கு செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையம் வந்து, பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், அவரிடம் நைசாக பேச்சு கொடுத்தார். பின்னர், ஆசைவார்த்தை கூறி, சுரேஷை உல்லாசத்துக்கு அழைத்துள்ளார்.
சபலத்தில் மயங்கிய சுரேஷை, அந்த பெண் தாம்பரத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஏற்கெனவே 3 இளம் பெண்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து, சுரேஷை தாக்கி, அவர் வைத்திருந்த ₹5 ஆயிரம் மற்றும் டெபிட் கார்டைகளை பறித்து கொண்டு, அவரை அங்கிருந்து துரத்திவிட்டனர். இதுகுறித்து சுரேஷ் கோயம்பேடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பிய 4 பெண்களை தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க சிறப்பு முகாம்: எல்ஐசி அறிவிப்பு
புழல் பகுதியில் அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளை 3 பேர் கைது
பாங்க் ஆப் மகாராஷ்டிரா சார்பில் ரூ.1.4 லட்சம் கோடி கடன் டெபாசிட் 12.35% உயர்வு
ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து ரூ.2 கோடி அரசு நிலம் மீட்பு அதிகாரிகள் நடவடிக்கை
வண்ணாரப்பேட்டை, நுங்கம்பாக்கம் பகுதியில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் 2 நடைபாதை பிளாசா மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
திருமங்கலத்தில் மால் வளாகத்தில் உள்ள பிரபல ஓட்டல் உணவில் புழு, கரப்பான் பூச்சி உணவு பாதுகாப்பு துறை ஆய்வு
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...