சென்னை காவல் துறையில் 154 வாகனங்கள் 30ம் தேதி ஏலம்
6/25/2022 1:16:15 AM
சென்னை: சென்னை மாநகர காவல் துறையில் பயன்படுத்தி கழிவு செய்யப்பட்ட 80 பைக்குகள் உள்பட 154 வாகனங்கள் வரும் 30ம் தேதி ஏலம் விடப்படுகிறது. இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகர காவலில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்ப்பட்ட 74 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 80 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 154 வாகனங்கள் வரும் 30ம் தேதி எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் காலை 10 மணிக்கு ஏலம் விடப்படுகிறது.
இந்த ஏலத்திற்கான முன்பதிவு வரும் 29ம் தேதி காலை 10 மணி முதல் 2 மணி வரை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடக்கிறது. அடையான அட்டை மற்றும் ஜிஎஸ்டி பதிவெண் சான்றுடன் வரும் ஏலதாரர்கள் மட்டுமே முன்பதிவு கட்டணம் செலுத்த அனுமதிக்கப்படுவர்.
முன்பணம் செலுத்தி பதிவு செய்த நபர்கள் வரும் 30ம் தேதி ஏலக்குழுவினர் முன்னிலையில் ஏலத்தில் பங்கேற்கலாம். ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களுக்கான ஏலத்தொகை மற்றும் ஜிஎஸ்டி தொகையை மறுநாள் முழுவதுமாக செலுத்த வேண்டும்.
மேலும் செய்திகள்
காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க சிறப்பு முகாம்: எல்ஐசி அறிவிப்பு
புழல் பகுதியில் அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளை 3 பேர் கைது
பாங்க் ஆப் மகாராஷ்டிரா சார்பில் ரூ.1.4 லட்சம் கோடி கடன் டெபாசிட் 12.35% உயர்வு
ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து ரூ.2 கோடி அரசு நிலம் மீட்பு அதிகாரிகள் நடவடிக்கை
வண்ணாரப்பேட்டை, நுங்கம்பாக்கம் பகுதியில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் 2 நடைபாதை பிளாசா மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
திருமங்கலத்தில் மால் வளாகத்தில் உள்ள பிரபல ஓட்டல் உணவில் புழு, கரப்பான் பூச்சி உணவு பாதுகாப்பு துறை ஆய்வு
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...