ஆசிரியை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 7 பவுன் நகை பறிப்பு
6/14/2022 5:10:30 AM
நெய்வேலி, ஜூன் 14: நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 25 பெண்ணையர் தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி அருள்செல்வி (42). இவர் நெய்வேலி வட்டம் 25 இல் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு 8 மணி அளவில் சக்திவேல் தனது வீட்டிலிருந்து அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அப்போது சக்திவேல் மனைவி அருள்செல்வி தனது மகளுடன் வீட்டின் எதிரில் அமர்ந்து காய்கறி வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் திடீரென அருள்செல்வி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவர் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் சென்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெய்வேலி டிஎஸ்பி ராஜேந்திரன் மற்றும் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார். என்எல்சி குடியிருப்பு பகுதியில் பள்ளி ஆசிரியர் கழுத்தில் கத்தி வைத்து தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் செய்திகள்
தேங்கி நிற்கும் மழைநீரால் விளை நிலங்கள் பாதிப்பு
பாவைகுளம் கிராமத்தில் போர்வெல் அமைக்கும் பணி
கடலூர் முதுநகர் ஐந்து கிணற்று மாரியம்மன் கோயில் செடல் உற்சவம்
கனியாமூர் கலவர வழக்கு 148 பேர் ஜாமீன் மனு ஒத்திவைப்பு
காதலிக்க மறுத்ததால் வீடுபுகுந்து ஆசிரியையை காரில் கடத்திய 4 பேர் கும்பல் கைது
ஆற்றை கடந்து செல்வதில் சிரமம் கூடலையாத்தூரில் உயர்மட்ட பாலம்
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!