ஜெகதாப்பட்டினம் அருகே மணல் கடத்திய மினிலாரி பறிமுதல்
6/14/2022 4:59:58 AM
அறந்தாங்கி, ஜூன் 14: ஜெகதாப்பட்டினம் அருகே மணல் கடத்திய மினிலாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஜெகதாப்பட்டினத்தை அடுத்த வடக்கு மஞ்சக்குடி பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு அனுமதி பெறாமல் மணல் ஏற்றி வந்த கானாடு முருகேசன் என்பவருக்கு சொந்தமான மினிலாரியை அரை யூனிட் மணலுடன் பறிமுதல் செய்து முருகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதுபோல், கோட்டைப்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் கார்க்கமங்கலம் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே நாட்டாணியை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் அனுமதி பெறாமல் மணல் ஏற்றி வந்த மாட்டுவண்டியை கால்யூனிட் மணலுடன் பறிமுதல் செய்து, ஜெயக்குமாரை கைது செய்தார்.
மேலும் செய்திகள்
திருமயம் அருகே திருவேட்டழகர் கோயில் வளாகத்தில் சிமெண்ட் கல் தளம் திறப்பு
டிரைவர், கண்டக்டர் பற்றாக்குறையால் அரசு பணிமனையில் பேருந்துகள் நிறுத்திவைப்பு
பொன்னமராவதி அழகிய நாச்சியம்மன் கோயில் ஆடி தேரோட்டம்
பொன்னமராவதி பகுதி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
கந்தர்வகோட்டை வெள்ளை முனியாண்டவர் கோயிலில் சிறப்பு பூஜை
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு வீட்டிலும் மூவண்ண கொடி ஏற்ற பிரசாரம்
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!