மின்கம்பி உரசியதால் வைக்கோல் லாரியில் தீ
6/14/2022 4:14:53 AM
திருப்புத்தூர், ஜூன் 14:வைக்கோல் லாரியில் மின் கம்பி உரசியதால் தீ பற்றி எரிந்தது.தேவகோட்டை மங்களங்குடியில் இருந்து நேற்று பிற்பகல் மதுரைக்கு வைக்கோல் லாரி சென்றது. மாலை 4 மணியளவில் திருப்புத்தூர் தம்பிபட்டி அருகே வரும்பொழுது சாலையின் நடுவே இருந்த மின் கம்பியில் வைக்கோல் மீது உரசியதால் திடீரென தீ பிடித்தது. லாரியில் தீ பிடித்தது கண்டு பொதுமக்கள் கூச்சலிட்டவுடன் டிரைவர் முத்துப்பாண்டி உடனடியாக அருகில் இருந்த காலி இடத்தில் லாரியை நிறுத்தினார். இச்சம்பவம் குறித்து உடனடியாக திருப்புத்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ஆனந்த சுப்பிரமணியன் தலைமையிலான வீரர்கள் தீயை முற்றிலுமாக அணைத்தனர். எனினும் லாரியில் ஏற்றிவந்த சுமார் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 80 கட்டு வைக்கோல் எரிந்து நாசமானது. டிரைவரின் புத்திசாலித்தனத்தால் பெரும் அளவில் சாலையில் நடக்கவிருந்த விபத்து தடுக்கப்பட்டது.
மேலும் செய்திகள்
முன்னாள் படைவீரர் குறைதீர் முகாம்
தேவகோட்டை அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் காயம்
காரைக்குடி பள்ளியில் நூல் வெளியீட்டு விழா
திருப்புத்தூரில் பெண்கள் கஞ்சிக்கலயம் ஊர்வலம்
அம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா
வங்கி சர்வர் முடக்கத்தால் அவதி
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!