பேப்பர் கப்புகளை பயன்படுத்திய தனியார் ஓட்டலுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
6/14/2022 4:09:08 AM
ஊட்டி,ஜூன்14:நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி வீசக்கூடிய பிளாஸ்டிக் கப்புகள், தட்டுகள் மற்றும் கேரி பேக்குகள் ஆகியவைகளுக்கு நீலகிரியில் தடை விதிக்கப்பட்டது. தடையை மீறி ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விற்பனை செய்யும் மற்றும் பயன்படுத்தும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஊட்டி அருகேயுள்ள பெர்ன்ஹில் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியுள்ளனர். இதனை அறிந்து அங்குச் சென்ற நகர் நல அலுவலர் ஸ்ரீதர் தலைமையிலான சுகாதாரத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட தனியார் ஓட்டல் நிர்வாகத்திற்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர். தொடர்ந்து இது போன்று தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்துவது தெரிய வந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.
மேலும் செய்திகள்
போதை பழக்கத்தால் எதிர்காலம் பாழாகி குடும்பம் அழியும் ஊட்டியில் அமைச்சர் ராமசந்திரன் பேச்சு
ஊட்டியில் காற்றுடன் கூடிய மழை ரோஜா மலர்கள் அழுகி உதிர்ந்தன
பர்லியாறு கடைகளுக்கான டெண்டர் ஒத்திவைப்பு
மாவட்டத்தில் காற்றுடன் கனமழை தொடர்கிறது மண் சரிவு, மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
மஞ்சூர் - கோவை சாலையில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பச்சை ரோஜா பூத்துள்ளது
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!