SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வனஉயர் பயிற்சி மையம் இயக்குனர் நியமனம்

6/14/2022 4:08:14 AM

கோவை, ஜூன் 14:  கோவையில் தமிழ்நாடு வனஉயர் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் மூலம் வனத்துறை அதிகாரிகளுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த ஒரு வருடமாக வனஉயர் பயிற்சி மையத்தின் இயக்குனர் பணியிடம் பொறுப்பு அதிகாரிகள் நிர்வகித்து வந்தனர். காலியாக இருந்த இப்பணியிடத்திற்கு தற்போது புதிதாக இயக்குனர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் 7 ஐஎப்எஸ் அதிகாரிகள் பணியிடாமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, சென்னை வண்டலூர் உயர்நிலை வன உயிரினப் பாதுகாப்பு நிறுவனம் கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலராக பணியாற்றி வந்த சேவாசிங், கோவை தமிழ்நாடு வனஉயர் பயிற்சி மையத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், விரைவில் பணி பொறுப்பு ஏற்பார் என தெரிகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SYDNEYY111

    தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..

  • Mexico_Mayor

    மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!

  • manipurlandaa1

    தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!

  • America_Truck

    அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!

  • wild-fire-california-30

    கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்