மாதம் ஒரு முறை பெற்றோர் கூட்டம்
6/14/2022 4:08:02 AM
கோவை, ஜூன் 14: கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் வெளியிட்ட அறிக்கையில்,‘‘நடப்பு கல்வியாண்டிற்கான வகுப்புகள் துவங்கின. பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணி மகத்தானது. ஆசிரியர்களை ஒருங்கிணைத்து, கண்காணித்து, கற்பித்தல் பணியை சிறப்பாக நடத்த வேண்டும். கூடுதல் மாணவர் சேர்க்கை இருக்கும் வகையில் செயல்படவேண்டும். பள்ளிக்கு மாணவர்கள் வருகையை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். இடைநிற்றல் தவிர்க்க வேண்டும். பள்ளிக்கு வராத மாணவர்களின் பெற்றோர்களை தொடர்பு கொண்டு பேசி, மாணவர்கள் தவறாமல் பள்ளிக்கு வர அறிவுறுத்த வேண்டும். கற்பித்தல் பணிகளுடன் கல்வி இணை செயல்பாடுகள், கல்வி சாரா செயல்பாடுகளை சிறப்பாக செய்ய வேண்டும். மன்ற செயல்பாடுகளில் மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மன்றத்தை தேர்வு செய்ய ஊக்கப்படுத்த வேண்டும். மாணவர்களின் செயல்பாடு, பள்ளி நிகழ்வுகள் சார்ந்த பெற்றோர் அறிந்து கொள்ள மாதம் ஒரு முறை பெற்றோர் கூட்டம் நடத்தவேண்டும். பள்ளிகளில் அனைத்து அத்தியாவசிய வசதிகள் செய்து தரவேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்
அழகுநாச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
திருப்பூரில் ஜவுளிக்கடை உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் திருட்டு
நாச்சிபாளையத்தில் சீரான குடிநீர் விநியோகம் கோரி காலிக் குடங்களுடன் மக்கள் மறியல்
ஊருக்குள் யானை வருவதை முன்கூட்டியே அறிய உதவும் கருவி பொறுத்தும் பணி தீவிரம்
கிழக்கு உக்ரைனில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தும் ரஷ்யப்படை... ஒரேநாளில் 12 பேர் பலியான சோகம்
சோமாலியாவில் தலைவிரித்தாடும் உணவு பஞ்சம்.. பசி பட்டினியுடன் மக்கள்!!
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!