புதிய மேம்பால சுவரில் பைக் மோதி வாலிபர் பலி
6/14/2022 4:07:23 AM
கோவை, ஜூன் 14: கோவை திருச்சி சாலையில் புதிய மேம்பால சுவரில் பைக் மோதி வாலிபர் பலியானார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார். கோவை திருச்சி சாலையில் புதிய மேம்பாலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போக்குவரத்து துவங்கியது. இந்த சாலையில் நேற்று முன்தினம் கோவை ராமநாதபுரம் நாகப்பன் தெருவை சேர்ந்த பிரசாந்த் (28), இவரது நண்பர் புலியகுளம் கந்தசாமி தெருவை சேர்ந்த உதயகுமார் (26) ஆகிய இருவரும் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். கோவை-திருச்சி ரோடு சுங்கம் ஜங்ஷன் மேற்புற புதிய மேம்பால சாலையில் சென்றபோது நிலைதடுமாறி பைக் மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவரில் மோதியதில் இருவரும் கீழே விழுந்தனர். இதில் பைக் ஓட்டி சென்ற பிரசாந்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உதயகுமாருக்கு காது, மூட்டு உள்ளிட்ட இடங்களில் படுகாயம் ஏற்பட்டது. அவ்வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருவரையும் டாக்டர்கள் பரிசோதித்தனர். இதில் பிரசாந்த் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். உதயகுமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்
அழகுநாச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
திருப்பூரில் ஜவுளிக்கடை உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் திருட்டு
நாச்சிபாளையத்தில் சீரான குடிநீர் விநியோகம் கோரி காலிக் குடங்களுடன் மக்கள் மறியல்
ஊருக்குள் யானை வருவதை முன்கூட்டியே அறிய உதவும் கருவி பொறுத்தும் பணி தீவிரம்
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!