கொரோனா காரணமாக ரத்தான 1ம் தேதி முதல் ஓய்வூதியர் நேர்காணல் நடத்த முடிவு
6/14/2022 4:06:30 AM
ஈரோடு, ஜூன் 14: கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்ட ஓய்வூதியர் நேர்காணல் வருகின்ற 1ம் தேதி முதல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியதாரர்கள் ஆண்டுதோறும் தங்களது வாழ்வு சான்று சமர்பிக்க வேண்டும். மாவட்ட கருவூலம், ஓய்வூதியம் பெறும் வங்கி, அஞ்சலகம், இ-சேவை மையம் போன்றவை மூலம் வாழ்வு சான்று சமர்பிக்கலாம்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஓய்வூதியர்களுக்கான நேர்காணல் நடத்தப்படவில்லை. இந்நிலையில், ஓய்வூதியர்கள் வரும் ஜூலை 1ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதிக்குள் நேர்காணலில் பங்கேற்க வேண்டும் என்றும், நேர்காணலுக்கு செல்வோர், தங்களது ஆதார் கார்டு, ஓய்வூதிய புத்தகம், வங்கி கணக்கு புத்தகம், கைபேசி ஆகியவற்றை எடுத்து செல்ல வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
பாசன பகுதியில் வேளாண் பணிகள் தீவிரம் சத்தியில் மலைப்பகுதியில் வீணாகும் தண்ணீர் தடுப்பணை கட்ட விவசாயிகள் கோரிக்கை
குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீரால் தொற்று நோய் பரவும் அபாயம்
6 முதல் பிளஸ் 2 வரை மாணவர்களுக்கு நாளை முதல் பருவத்தேர்வு தொடக்கம்
நான்கு வழி சாலைக்காக அகலப்படுத்தும் பணி கஞ்சா விற்ற பெண் உட்பட 3 பேர் கைது
அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட், புத்தகங்கள்
ரூ.6.49 கோடியில் கட்டப்பட்ட போலீசார் குடியிருப்பு, 2 போலீஸ் ஸ்டேஷன்கள்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!