கீழ் ஓட்டிவாக்கத்தில் புவனேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
6/11/2022 3:11:14 AM
வாலாஜாபாத்:காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் கீழ் ஓட்டிவாக்கம் கிராமத்தில் மிகவும்பழமை வாய்ந்த புவனேஸ்வரி அம்பாள் சமேத பீமேஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் பல ஆண்டு காலமாக சிதிலமடைந்திருந்த நிலையில் தற்போது கோயிலின் விமான கோபுரம், சன்னதிகளில் கோபுரங்களுக்கு புனரமைப்பு பணிகள் செய்து வர்ணம் பூசப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா நேற்று நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவிற்காக யாகசாலை அமைக்கப்பட்டு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம்,லட்சுமி ஹோமம்,வாஸ்து சாந்தி ஹோமம், உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு யாகசாலை பூஜை செய்யப்பட்டு, பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் சென்று கோயில் கோபுரம், சன்னதி கோபுரங்களில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மூலவர் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. இதில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர். பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும் செய்திகள்
வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை பிடித்த காவலருக்கு அரிவாள் வெட்டு
காஞ்சிபுரம் அருகே பரபரப்பு; அம்பேத்கர் சிலைக்கு காவித்துண்டு விசிக ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம் மாநகராட்சியில் பல்துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழில் முனைவோர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் ஆர்த்தி அறிவிப்பு
சிறுகாவேரிப்பாக்கம் ஜெஜெ நகரில் பராமரிப்பில்லாமல் பாழாகும் சமுதாய கூடம்; சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
கீழம்பி கிராம ஊராட்சி பள்ளிக்கு ரூ. 17.36 லட்சம் மதிப்பீட்டில் 2 கூடுதல் வகுப்பறை கட்டிடம்; எழிலரசன் எம்எல்ஏ திறந்து வைத்தார்
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!