வேளாண் இயந்திரங்கள் பழுது நீக்க மையம் அமைக்க மானியம்
6/9/2022 3:31:15 AM
விருதுநகர், ஜூன் 9: விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள தகவல்: வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் பராமரிப்பு மையம் மானியத்தில் அமைக்கும் புதிய திட்டம் செயல்பாட்டில் உள்ளது. விவசாயிகள் தங்களது விளைநிலங்களிலேயே பழுது நீக்கி பராமரிக்க, விவசாய பணிகளை இடர்பாடுகள் இன்றி குறித்த நேரத்தில் செய்திட கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் மையங்கள் அமைக்கப்படுகிறது.விவசாய குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு மானியத்தில் அமைத்து தரப்படும். இந்த மையங்கள் ரூ.8 லட்சம் செலவில் அமைக்கப்படுகிறது. இதில் 50 சதவீத மானியமாக ரூ.4 லட்சம் வழங்கப்படும். பராமரிப்பு மையங்கள் அமைக்க போதிய இடவசதி, மும்முனை மின்சாரம் இணைப்பு கொண்ட கிராமப்புற இளைஞர்கள், தொழில் முனைவோர், விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தி நிறுவனங்கள் வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளரை அணுகி விண்ணப்பிக்கலாம்.கலெக்டரின் மாவட்ட அளவிலான செயற்குழு கூட்ட ஒப்புதலுக்கு பின்னர் மானியம் அளிக்கப்படும். இயந்திரங்கள் ஒப்பந்தப்புள்ளி அடிப்படையில் கண்காணிப்பு பொறியாளர் முடிவு செய்து பயனாளிகள் மொத்த தொகையை செலுத்தி வாங்கி கொள்ளலாம். மானிய தொகை பயனாளிகள் வங்கி கணக்கில் பின்னேற்பு மானியமாக செலுத்தப்படும். விபரங்களுக்கு விருதுநகர், திருவில்லிபுத்தூர் உபகோட்ட வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளரை அணுகி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்
மேலும் செய்திகள்
கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
திமுக உட்கட்சி தேர்தல் சிவகாசி மாநகர பொறுப்புகளுக்கு இன்று விருப்ப மனு பெறப்படும் மாநகர திமுக பொறுப்பாளர் தகவல்
சிவகாசியில் மின்வாரிய ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு அனுமதி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு கலெக்டர் மேகநாதரெட்டி தகவல்
அரசு அருங்காட்சியகத்தில் ஆக.14ல் மாணவர்களுக்கு மாறுவேட போட்டி 1 முதல் 8 வரை படிப்போர் பங்கேற்கலாம்
ராஜபாளையத்தில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!