உத்தமபாளையம் அருகே தோட்ட தொழிலாளி கொலை?
6/9/2022 3:28:55 AM
உத்தமபாளையம், ஜூன் 9: கம்பம் கிருஷ்ணாபுரம் பழைய செக்போஸ்ட் தெருவை சேர்ந்தவர் செல்வம் (45). இவர் உத்தமபாளையம் அருகிலுள்ள அம்மாபட்டியை சேர்ந்த சின்னச்சாமியின் தென்னந்தோப்பில் இரவு காவலராக கடந்த ஒன்றரை ஆண்டாக பணிபுரிந்து வருகிறார். இதே தோட்டத்தில் சின்னமனூரை சேர்ந்த மணிகண்டன், தனது மனைவியுடன் தங்கி வேலை செய்துள்ளார். நேற்று முன்தினம் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பின் கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன், கீழே தள்ளி விட்டதில் செல்வம் தலையில் அடிபட்டு ரத்தம் வர துவங்கியது. உடனே அவரை மீட்டு உத்தமபாளையம் ஜிஹெச்சில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்த பின் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு ஜிஹெச்சிற்கு அனுப்ப பரிந்துரை செய்தனர். ஆனால் செல்வம் தேனி க.விலக்கு ஜிஹெச் செல்லாமல் அம்மாபட்டியில் உள்ள தோட்டத்திற்கே சென்றார். இந்நிலையில் நேற்று காலை தோட்டத்தில் செல்வம் இறந்து கிடந்துள்ளார். தகவலறிந்ததும் உத்தமபாளையம் சிலைமணி உள்ளிட்ட போலீசார் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி க.விலக்கு ஜிஹெச்சிற்கு அனுப்பி வைத்தனர். கீழே தள்ளி விட்டதில் இறந்தாரா அல்லது அடித்து கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
ஆண்டிபட்டியில் கலைஞர் நினைவு தினம் அனுசரிப்பு
மேரிமாதா கல்லூரியில் நவீன உடற்பயிற்சி கூடம் திறப்பு
கருப்பணசாமி கோயிலில் 100 ஆடுகள் பலியிட்டு வழிபாடு
குடிபோதையில் ரகளை 4 பேர் கைது
காட்டுமாடு தாக்கி ஒருவர் பலி
சிந்து, கிடாம்பி முன்னேற்றம்
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!