ஆன்லைன் மோசடி செய்த 4 பேர் கைது
6/8/2022 3:49:47 AM
தேனி, ஜூன் 8: மதுரை சிக்கந்தர் சாவடியைச் சேர்ந்த ராஜேஷ்குமார், தேனியில் உள்ள பெரியகுளம் சாலையில் புத்தக விற்பனை கடை நடத்தி வருகிறார். கொரோனா காலத்தில் கடை மூடப்பட்டதால், வருமானம் இல்லாமல், ஆன்லைன் மூலம் ரூ.6 ஆயிரம் கடன் பெற்றார். பின்னர் இந்த தொகையை திரும்ப செலுத்திய பிறகும் மீண்டும், மீண்டும் பணம் செலுத்துமாறு ஆன்லைன் மூலமாக வற்புறுத்தப்பட்டது. ஒரு கட்டத்தில் பணம் செலுத்தத் தவறினால், தங்கள் புகைப்படத்தை மார்பிங் செய்து அவதூறு பரப்புவோம் என ஆன்லைனில் மிரட்டியுள்ளனர். இதுதொடர்பாக ராஜேஷ்குமார், தேனி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில், போலீசார் ராஜ்குமார் ஆன்லைனில் குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பியது குறித்து விசாரணை நடத்தினர். இதில், மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த ஒரு கும்பல் மோசடிகள் ஈடுபட்டது தெரிய வந்தது. இந்த கும்பல் 7 வங்கி கணக்கு மூலம் சுமார் 11 கோடி ரூபாய்க்கு பண பரிவர்த்தனை செய்ததும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் அங்கு சென்று மோசடியில் ஈடுபட்ட மகராந்த் ஷிண்டே, பிரபுல் சாந்திலால், ராஜேந்திர பாலு, தியானேஷ்வர் ஆகிய நான்கு பேரை கைது செய்து கொண்டு வந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
ஆண்டிபட்டியில் கலைஞர் நினைவு தினம் அனுசரிப்பு
மேரிமாதா கல்லூரியில் நவீன உடற்பயிற்சி கூடம் திறப்பு
கருப்பணசாமி கோயிலில் 100 ஆடுகள் பலியிட்டு வழிபாடு
குடிபோதையில் ரகளை 4 பேர் கைது
காட்டுமாடு தாக்கி ஒருவர் பலி
சிந்து, கிடாம்பி முன்னேற்றம்
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!