கால்நடை உதவியாளர் பணியிடம் நிரப்புவதாக பரவும் வதந்தி
6/8/2022 3:22:15 AM
தர்மபுரி, ஜூன் 8: தர்மபுரி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையில் கால்நடை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக வெளியாகும் வதந்திகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என கலெக்டர் திவ்யதர்சினி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கால்நடை பராமரிப்புத்துறையில் கால்நடைகள் கையாளுதல், உதவியாளர் ஆகிய பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்பப்படுவதாகவும், இதற்கு சம்பளமாக ₹15,000 மற்றும் ₹18,000 எனவும், தகுதி மற்றும் வயது ஆகியவை நிர்ணயிக்கப்பட்டு, 90 மணி நேரம் பயிற்சி அளித்து பணிநி யமன ஆணை வழங்கப்படும். இதற்கான ஆணை ஜூன் முதல் அல்லது 2வது வாரத்தில் வெளியிடப்படும். விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்திடுமாறு தலா 160 பணியிடங்கள்(ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா 5 பணியிடங்கள் வீதம்) என தவறான செய்தி வாட்ஸ்அப் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் மூலம் பகிரப்பட்ட செய்திகள் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறைக்கு தொடர்பற்றவை. இதுபோன்ற வதந்தி விளம்பரங்களைக் கண்டு பொதுமக்கள் ஏமாற வேண்டாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
மாரியம்மன் கோயிலில் மாவிளக்கு ஊர்வலம்
இன்று முதல் வத்தல்மலை உள்பட 16 புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கம்
இணை இடுபொருட்கள் வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது
விடுதலைப் போரில் பங்கேற்ற அறியப்படாத வீரர்களை அறிந்து அவர்களை போற்ற வேண்டும்
அரசு பள்ளியில் இடிந்த சுற்றுச்சுவர்
லாரி சங்க மகாசபை கூட்டம்
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!