அரூர் அருகே பிளஸ்1 மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது
6/8/2022 3:21:56 AM
அரூர், ஜூன் 8: அரூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்த மாணவியை கடந்த மாதம் 21ம் தேதி குருபரஅள்ளியை சேர்ந்த அஜித்(30) கடத்திச்சென்றார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அரூர் போலீசில் புகாரளித்தனர். புகாரின் பேரில் அரூர் டிஎஸ்பி பெனாசீர் பாத்திமா தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர். இந்நிலையில் அஜித்தும், மாணவியும் பெங்களூரில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பெங்களூருக்கு விரைந்த தனிப்படையினர் நேற்று அஜித்தை கைது செய்து அரூர் போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, மாணவியை கடத்திச்சென்ற அஜித்தை வன்கொடுமை தடுப்புச்சட்டம், போக்சோ மற்றும் பெண் குழந்தை கடத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். மாணவியை கடத்த அஜித்திற்கு உதவிய அவரது நண்பர் கார்த்திக்கை போலீசார் கடந்த மாதம் 31ம் தேதி கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
மாரியம்மன் கோயிலில் மாவிளக்கு ஊர்வலம்
இன்று முதல் வத்தல்மலை உள்பட 16 புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கம்
இணை இடுபொருட்கள் வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது
விடுதலைப் போரில் பங்கேற்ற அறியப்படாத வீரர்களை அறிந்து அவர்களை போற்ற வேண்டும்
அரசு பள்ளியில் இடிந்த சுற்றுச்சுவர்
லாரி சங்க மகாசபை கூட்டம்
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!