SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

50,775 பயனாளிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.379.46 கோடியில் நலத்திட்ட உதவிகள் இன்று வழங்குகிறார்

6/8/2022 3:15:52 AM

புதுக்கோட்டை, ஜூன் 8: புதுக்கோட்டைக்கு இன்று வருகைதரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், 50,775 பயனாளிகளுக்கு ரூ.379.46 கோடியில் அரசின் நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். முதல்வர் வருகையையொட்டி புதுகை மாவட்டம் முழுவதும் விழா கோலமாக உள்ளது. சிவகங்கை, புதுக்கோட்டை பகுதிகளில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மதுரை சென்றார். அங்கு கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகத்தை பார்வையிடுட்டார். இன்று (8ம் தேதி) மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக காலை 9 மணிக்கு சிவகங்கைக்கு செல்கிறார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள கோட்டைவேங்கைப்பட்டி கிராமத்தில் 100 வீடுகளை கொண்ட பெரியார் நினைவு சமத்துவபுரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். பின்னர் அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதோடு, ஏற்கனவே முடிக்கப்பட்ட திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டுகிறார்.

அதைத்தொடர்ந்து சாலை மார்க்கமாக மதியம் 1.30 மணிக்கு புதுக்கோட்டைக்கு வருகிறார். முதல்வருக்கும் மாவட்ட நிர்வாகம், திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் ரோஜா இல்லத்திற்கு வரும் முதல்வர். அங்கு சிறிது நேரம் ஓய்வுவெடுக்கிறார். மாலை 5 மணிக்கு மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ள அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார். இந்த விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டையில் இதுவரை நிறைவடைந்த 138 திட்டப்பணிகள் ரூ.81.13 கோடி மதிப்பில் தொடங்கி வைக்கிறார். 1394 புதிய திட்டப்பணிகள் ரூ.144.05 கோடி மதிப்பில் அடிக்கல் நாட்டுகிறார். மேலும், 50,775 பயனாளிகளுக்கு ரூ.379.46 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

மகளிர் திட்டத்தின் மூலம் மகளிர் குழுக்கள் உற்பத்திக் குழுக்கள், சமுதாய முதலீட்டுக் குழு உள்ளிட்ட குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளன. மேலும், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தத் திட்டப் பயனாளிகளை விழாவுக்கு அழைத்து வருவதற்கான பணிகளையும் வருவாய்த் துறை மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் மேற்கொண்டுள்ளனர். முதல்வர் வருகையொட்டி மாவட்டம் முழுவதும் விழா கோலமாக உள்ளது. இதையொட்டி முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி மாவட்ட விளையாட்டு மைதானம் மற்றும் மாவட்டத்தில் திருச்சி சரக டிஐஜி சரவணசுந்தர் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • ragul-inde-15

    டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!

  • independence-15

    75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!

  • inde-12

    நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!

  • drugs-11

    போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

  • cuba-fire-accident

    கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்