சுற்றுச்சூழல் தினம் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு
6/6/2022 5:50:03 AM
மாமல்லபுரம்: மாமல்லபுரத்துக்கு புராதன சின்னங்களை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் வெண்ணெய் உருண்டைபாறை, அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயிலை சுற்றிப் பார்க்கின்றனர். பின்னர், கடற்கரைக்கு சென்று பல்வேறு தின்பண்டங்களை சாப்பிட்ட பின்னர் குப்பைகளை தொட்டியில் போடாமல் ஆங்காங்கே வீசிவிட்டு செல்கின்றனர். இதனால், கடற்கரையின் அழகு கெட்டு, குப்பைகளால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இந்நிலையில், உலக சுற்றுச்சூழல் தினமான நேற்று மாமல்லபுரத்தை சேர்ந்த அபிராமி யோகாலயா சார்பில், அதன் நிறுவனர் சுரேஷ்பாபு தலைமையில் 30க்கும் மேற்பட்ட யோகா கலைஞர்கள், பொதுமக்கள் கடற்கரை கிடந்த இளநீர் மட்டைகள், பிளாஸ்டிக் பைகள், காகிதங்கள், காலணிகள், வாட்டர் பாட்டில்களை சேகரித்தனர். பின்னர், கடற்கரை மணலில் உலக வரைபடம் வரைந்து அதனை சுற்றி குப்பைகளை தரம் பிரித்து வைத்து பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது. குப்பைகளை, தொட்டியில் போட வேண்டும். மேலும், கடற்கரை மற்றும் தாங்கள் வசிக்கும் இடங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி யோகா கலைஞர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
மேலும் செய்திகள்
வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை பிடித்த காவலருக்கு அரிவாள் வெட்டு
காஞ்சிபுரம் அருகே பரபரப்பு; அம்பேத்கர் சிலைக்கு காவித்துண்டு விசிக ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம் மாநகராட்சியில் பல்துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழில் முனைவோர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் ஆர்த்தி அறிவிப்பு
சிறுகாவேரிப்பாக்கம் ஜெஜெ நகரில் பராமரிப்பில்லாமல் பாழாகும் சமுதாய கூடம்; சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
கீழம்பி கிராம ஊராட்சி பள்ளிக்கு ரூ. 17.36 லட்சம் மதிப்பீட்டில் 2 கூடுதல் வகுப்பறை கட்டிடம்; எழிலரசன் எம்எல்ஏ திறந்து வைத்தார்
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!