கலைஞர் பிறந்த தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடுதல்
6/6/2022 4:18:47 AM
சின்னமனூர்: சின்னமனூர் அருகே, குச்சனூர் பேரூராட்சியில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 99வது பிறந்த நாளையொட்டி, 99 மரக்கன்றுகள் நட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். பேரூராட்சி தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் சசிகலா முன்னிலை வகித்தார்.நகரில் உள்ள அருள்மிகு சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோயில் வளாகம் மற்றும் பேரூராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் பல ஜாதி வகையான 99 மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். மேலும், கலைஞரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் பேரூர் மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.இதேபோல, மார்க்கையன் கோட்டை பேரூராட்சியில் கலைஞரின் 99வது பிறந்தநாள் விழா பேரூர் செயலாளரும், பேரூராட்சி தலைவருமான முருகன் தலைமையில் நடந்தது. இதையொட்டி மரக்கன்றுகள் நட்டு, இனிப்புகள் வழங்கினர். மார்க்கையன்கோட்டை பஸ்நிலைய பகுதியில் கலைஞரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அவருக்கு மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
ஆண்டிபட்டியில் கலைஞர் நினைவு தினம் அனுசரிப்பு
மேரிமாதா கல்லூரியில் நவீன உடற்பயிற்சி கூடம் திறப்பு
கருப்பணசாமி கோயிலில் 100 ஆடுகள் பலியிட்டு வழிபாடு
குடிபோதையில் ரகளை 4 பேர் கைது
காட்டுமாடு தாக்கி ஒருவர் பலி
சிந்து, கிடாம்பி முன்னேற்றம்
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!